நாகர்கோவில் கிராமத்தில் மீளக்குடியமர்ந்த மக்கள் படும் அவலம் ( படங்கள் இணைப்பு).
நாகர்கோவில் கிராமத்தில் மீளக்குடியமர்ந்தவர்கள் சொந்தமண்ணில் மீளக்குடியமர்ந்த சந்தோஷத்திற்காக பெரும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்வதை இணைக்கப்பட்ட படத்தில் காணலாம். ( படங்கள் இணைப்பு )
Last Updated (Saturday, 23 July 2011 21:52)
யாழ்/நாகர்கோவில் மகாவித்தியாலயம் ஆசிரியர் தினம் 2010 - ( படங்கள் இணைப்பு)
யாழ்/நாகர்கோவில் மகாவித்தியாலயம் இடம் பெயர்ந்து கற்கோவளம் புனிதநகர் பருத்தித்துறையில் இயங்கிவருகின்றது. 2000 ஆண்டு தொடக்கம் 2010 இது வரையில் சிறப்பாக நடார்த்தப்படாத ஒரு ஆசிரியர்தின விழாவை இந்தவருடம் (அதாவது) 06.10.2010 இன்று பாடசாலை அதிபர் திரு க.கண்ணன் அவர்களின் விருப்பத்திற்கிணங்க பழையமாணவர்கள் முன்னெடுத்து மிகவும்சிறப்பாக இவ்விழாவை கொண்டாடினர். (படங்கள் இணைப்பு)
நாகர்கோவில் தெற்கு மக்களின் விவசாயத்தொழில்
யாழ்ப்பாணம் நாகர்கோவில் என்னும் இக் கிராமமானது. நாகர்கோவில் தெற்கு, நாகர்கோவில் வடக்கு என்று இரு பிரிவுகளைக்கொண்டதுடன் நாகர்கோவில் தெற்கே வாழும் மக்களின் பாரம்பர்ய தொளிலாக கமத்தொளிலையும், நாகர்கோவில் வடக்கே வாழும் மக்களின் பாரம்பரிய தொளிலாக மீன் பிடித்தொளிலயும் புரிந்து வாழ்ந்துவந்துள்ளார்கள். நாகர் கோவில் தெற்கே வாழ்பவர்களின் வாழ்க்கைவரலாறு......!
நாகர்கோவில் வடக்கு மக்களின் கடற்றொலிலாளர் வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணம் நாகர்கோவில் என்னும் இக் கிராமமானது. நாகர்கோவில் தெற்கு, நாகர்கோவில் வடக்கு என்று இரு பிரிவுகளைக்கொண்டதுடன் நாகர்கோவில் தெற்கே வாழும் மக்களின் பாரம்பர்ய தொளிலாக கமத்தொளிலையும், நாகர்கோவில் வடக்கே வாழும் மக்களின் பாரம்பரிய தொளிலாக மீன் பிடித்தொளிலயும் புரிந்து வாழ்ந்துவந்துள்ளார்கள். நாகர் கோவில் வடக்கே வாழ்பவர்களின் வாழ்க்கைவரலாறு......!
எமதுகிராமத்து வரலாறு
தெற்காசியாவின் முத்து என வர்ணிக்கப்படுகின்ற ஈழத்திருநாட்டின் வடமுனை என கருதப்படுவது யாழ்ப்பாணக்குடாநாடு ஆகும். யாழ்குடாநாடு வலிகாமம், யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி, தீவகம் என ஐந்து பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. இவற்றுள் சகலவளங்களும் நிறைந்து விளங்குவது வடமராட்சி பிரிவு என்றால் மிகையாகாது. வடமராட்சிப் பிரிவின் தலைநகரம் என்று கூறப்படும் பருத்தித்துறைக்கு கிழக்கே சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது நாகர் கோவில் கிராமம் ஆகும்.













