Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home Village Info
We have 18 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday101
mod_vvisit_counterYesterday203
mod_vvisit_counterThis week643
mod_vvisit_counterThis month1765
mod_vvisit_counterAll764516
Live User

அறிவிப்பு

இன்று 6.6.2011 நடைபெற்ற வைகாசிப்பொங்கல் 2011 (படங்கள் இணைப்பு)

கடந்த வருடத்தைவிட இந்த ஆண்டு மிகவும் சிறப்பான முறையில் வைகாசிப்பொங்கல் விழா நிறைந்த பக்த அடியார்கள் கூட்டத்தோடு நிறைவேறியது. எல்லா மக்களும் மிகுந்த ஒற்றுமையும் ,பக்திப்பரவசத்துடனும் கலகலப்பாகவும் கலந்து விழாவை சிறப்பித்தார்கள். விழா இனிதே நடைபெற்றதையிட்டு எம் கிராமத்து மக்கள் பூரித்துக்கொண்டனர்.

எமது கிராமத்தைவிட்டு இடம்பெயர்ந்திருந்த போது பலவருடங்கள் இவ்விழாவானது நடைபெறாமல் போயுள்ளவேளையில் சென்றவருடம் சுமாராக வைகாசிப்பொங்கல் நடைபெற்றது. இருந்தும் இந்தவருடம் எந்த மாற்றமும் இல்லாமல் இடம்பெயர்வதற்கு முன்னர் எப்படி வைகாசிப்பொங்கல் சிறப்பாக இக்கிராம மக்கள் நடாத்துபவர்களோ அதேபோன்று எந்த குறைகளும் இன்றி அம்பாளின் வருடாந்த வைகாசிப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த ஆண்டு நடந்த விழாவினை புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் அனைத்து பக்தர்களும் நேரில் பார்ப்பதுபொன்று அனைத்து நிகழ்வுகளும் புகைப்படமாக உங்களுக்கும் நாகர்மணல்.கொம் இணையத்தள நேயர்களின் கண்களுக்கு விருந்தாக தந்து அம்பாளினுடைய அனுக்கிரகம் பெற்று சிறப்புடன் வாழ்வீர்களாக.

" நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் துணையுடன்"

நன்றி

புகைப்படங்களை பார்வையிட இங்கே ஆழுத்தவும்

Last Updated (Monday, 06 June 2011 19:56)

 

தமிழ் ஒளி விளையாட்டுக்கழக வரலாற்றுச்சுருக்கம்.

           பல ஆண்டுகளுக்கு முன்னர் அமரர் திரு குணரட்ணம் சிறி, திரு சிங்கராசா நவீனநாயகம், திரு யொ.ஜெயக்கொடி, திரு பாக்கியநாதன் மரியதாஸ், திரு லவன் இவர்களது வழிநடத்தலில் திரு குணரட்ணம் சிறி அவர்களை தலைவராக்கி தமிழ் ஒளி விளையாட்டுக்கழகம் என்கின்ற ஒரு கருத்தும் கவர்ச்சியும் கொண்ட அழகான பெயரை திரு சிங்கராசா நவீனநாயகம் சூட்ட சக உறுப்பினர்கள் அதனை ஏற்றுக்கொண்டு இப்பெயரை தீர்மானித்தனர். இன்று தமிழ் ஒளி விளையாட்டுக்கழகம்  பேர்சொல்லுமளவிற்கு உருவெடுத்து வலுவடைந்துள்ளது.

அதன்பின்னர் போராட்ட சூழ்நிலமைகாரணமாக இடம்பெயர்ந்து இத்தமிழ் ஒளி விளையாட்டுக்கழக வீரர்கள் ஆங்காங்கேசென்றபோது இவ்விளையாட்டுக்கழகம் சரியானமுறையில் செயற்படாமல் இருந்தது. தற்போது அனைவரும் ஒன்றாக சேர்ந்ததன் பனாக தமிழ் ஒளி விளையாட்டுக்கழகம் மீண்டும் செயற்படத்தொடங்கியுள்ளது.

இதனால் தற்போது தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகத்தினர் தமிழ் ஒளி விளையாட்டுக்கழ மூத்த உறுப்பினர்களுக்கு நன்றி கூறிவதுடன் எங்களால் இயன்றவகையில் இவ்விளையாட்டுக்கழகத்தினை ஒருங்கிணைத்து சிறப்புற வழிநடத்துவோம் என்றும். உறுதிகொண்டுள்ளனர்.

 

 

நன்றி

 

தகவல்:- தற்போதைய நிர்வாகத்தலைவர்

                 திரு சிங்கராசா புஸ்பராசா

Last Updated (Friday, 03 June 2011 10:46)

 

நாகர்கோவில் கிழக்கு தமிழ் ஒளி விளையாட்டுக்கழகம்

தமிழ் ஒளி விளையாட்டுக்கழகம் புனரமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலங்களாக போரட்ட சூழ்நிலமையினால் தமிழ் ஒளி விளையாட்டுக்கழகம் இயங்காமல் போனது தற்பொழுது புதியநிர்வாகத்துடன் மீண்டும் புதிதாய் உருவெடுத்துள்ளது.

அதன்பயனாக கடந்த 18.03.2011 அன்று பொதுக்கூட்டம் கூட்டி அனைத்து அங்கத்தவர்கள் மத்தியில் புதிய நிர்வாகத்தெரிவுகள் இடம்பெற்றன  இத்தெரிவுகளில் தெரிவுசெய்யப்பட்டவர்கள் வரிசையில்.

  • தலைவர்:- சிங்கராசா புஸ்பராசா
  • உ.தலைவர்::  பாலசுப்பிரமணியம் ஜெகநாதன்
  • செயலாளர்:: குணரட்னம் கீர்த்தன்
  • பொருளாளர்:: கணேஸ் விஜயகுமார்

நிர்வாக உறுப்பினர்களாக

  1. அழகராசா அன்ரனிஜெயராஜ்
  2. தங்கராசா குலவீரசிங்கம்
  3. திருச்செல்வன் செல்வகாந்தன்

விளையாட்டுத்தலைவராக

பாலசுப்பிரமணியம் மேகநாதன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். அதனைத்தொடர்ந்து இவ்விளையாட்டுக்கழக வீரர்கள் விளையாட்டுக்கழக சீருடையினை அணிந்து தமிழ் ஒளி விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட  Aஅணியும் Bஅணியும் இணைந்து உதைபந்தட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்பர்சிட்டி காண்டீபன் விளையாட்டுக்கழகமும் தமிழ் ஒளி விளையாட்டுக்கழகமும் இணைந்து இன்பர்சிட்டியில் காண்டீபன் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இதன் புகைபடங்கள் பின்னர் இணைக்கப்படும்.

                                            தகவல்::  தமிழ் ஒளி வி.க. தலைவர்

Last Updated (Friday, 03 June 2011 20:32)

 

28.05.2011 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு விசேட பொதுக்கூட்டம்

28.05.2011 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் புனிதநகர் கற்கோவளம்  பகுதியில் அமைந்துள்ள பொதுமண்டபத்தில் நாகர்கோவில் வடக்கு மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமான விடயங்களுடனான விசேட பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதால் நாகர்கோவில் வடக்குமக்களாகிய அனைவரும் இக்கூட்டத்திற்கு சமூகமளித்து தங்கள் ஒவ்வொருவருடைய உரிமைகளை நிலைநிறுத்தும்படி கேட்டுக்கொள்கின்றனர்.

குறிப்பு:-    இவ்விசேடபொதுக்கூட்டம் உங்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமானதாகும்.

Last Updated (Saturday, 28 May 2011 01:47)

 

06.06.2011 நாகர்கோவில் கண்ணாகை அம்மன் ஆலய வடுடாந்த பொங்கல்

நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலய வடுடாந்த பொங்கல் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக நடைபெறுவுள்ளது. 30.05.2011 திங்கட்கிழமை கும்பம் வைத்து படிப்புக்கள் ஆரம்பித்து 06.06.2011 திங்கட்கிழமை பொங்கல் திருவிழா நடைபெறும்.

கண்ணகை அம்பாள் அடியார்களே இந்த ஆண்டு அம்மனுக்கு கும்பம் வைத்து படிப்புக்கள் நடைபெறும் காலப்பகுதியில் தினசரி நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆயத்திற்காக பேரூந்து சேவையில் ஈடுபடும் என்பதனை மிக மகிழ்ச்சியுடன் அம்பிகை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Last Updated (Thursday, 19 May 2011 04:15)

 
More Articles...
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery