Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் கண்ணிவெடியில் சிக்கிய ஜேம்ஸ் லியோ 14.07.2013 இன்று காலமானார்

கண்ணிவெடியில் சிக்கிய ஜேம்ஸ் லியோ 14.07.2013 இன்று காலமானார்

எமது கிராமத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியாளராகிய குடாரப்பு வடக்கைச்சேர்ந்த இளைஞன் ஜேம்ஸ் லியோ வயது 29 ஆகியவர் படுகாயமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சைபெற்றுவந்தவேளையில் சிகிச்சை பயனின்றி 14.07.2013 இன்று உயிரிளந்துள்ளார். நாகர்கோவில், குடாரப்பு பகுதிகளில் கணிவெடி அகற்றும்பணியில் ஹலோ டிரஸ் நிறுவனம் நூற்றுக்கணக்கான பணியாளர்களை கடமையில் ஈடுபடுத்தி மிகவும் துரிதமாக செயல்ப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

அந்தவகையில் 12.07.2013 அன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் 8:30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த இளைஞனை உடனடியாக அம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று அங்கு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது  ஏற்கனவே பிரசுரித்த விடயம்.

குறிப்பு:- எமதுகிராமத்தில் மிதிவெடி தவறுதலாக வெடித்து மரணமான முதலாவது பணியாளர் இவரேஆவர்.

மரணாமான ஜேம்ஸ் லியோ குடும்பத்தினருக்கு எமது கிராம மக்கள் சார்பாக நாகர்மணல்.கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கின்றார்கள். 

தகவல்:- நாகர்கோவில் வடக்கு நண்பர்கள், சகபணியாளர்கள் 

Last Updated (Sunday, 14 July 2013 14:15)

 
MiniCalendar
May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery