செல்லையா நாகேந்திரம் (துரை) 04.01.2013 இன்று காலமானார்.

நாகர்கோவில் கிழக்கை பிறப்பிடமாகவும். இன்பர்சிட்டியை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நாகேந்திரம் (துரை) 04.01.2013 இன்று காலமானார். கடந்த இரண்டு வாரங்களாக யாழ்போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் மருத்துவப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வந்த இவர் 04.01.2013 வெள்ளிக்கிழமை காலை சுமார் 09:00 மணியளவில் காலமானார்.

காலஞ்சென்ற இவர் நாகேந்திரம் ராஜேஸ்வரி என்பவரின் பாசமிகு கணவரும், ஜனனி, (லண்டன்) ஜிவேந்தர் (அவுஸ்திரேலியா), ஜெகன், ஜனார்த்தனன், மீரா ஆகியோரின் தந்தையும் ,சீதாலட்சுமி, அரியதேவி, பாலசுப்பிரமணியம், சின்னராசா, லலிதா ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார் அன்னாரது இறுதிக்கிரியை 10.01.2013 வியாழக்கிழமை மு.ப.10:30 மணியளவில் சுப்பர்மடம் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

அன்னாரது குடும்பத்தினருக்கு நாகர்கோவில் வடக்கு மக்கள் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றதோடு இறைவனடி சேர்ந்த ஆத்மா சாந்தியடைய எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போமாக.

Last Updated (Thursday, 10 January 2013 00:45)