மரண அறிவித்தல் - பத்மநாதன் கோவிந்தபிள்ளை 21.02.2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

யாழ். நாகர்கோவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும் கொண்ட  பத்மநாதன் கோவிந்தபிள்ளை அவர்கள் 21.02.2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலாதேவி(கனடா) அவர்களின் பாசமிகு கணவரும், 

சர்மிளா(லண்டன்), வினுதா(பிரான்ஸ்), பாமிலா(கனடா), பிரசாத் ஆகியோரின் அன்புத் தந்தையும், 

தீசன்(லண்டன்), சிவகுமார்(பிரான்ஸ்), பரந்தாமன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், 

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், பரராஜசிங்கம், இரத்தினசிங்கம் மற்றும் வீரகத்திப்பிள்ளை, குகநாதன்(சுவிஸ்), நவநாதன்(சுவிஸ்), கமலாதேவி, இந்திரதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராமலிங்கம், பாலசுந்தரம், பத்மாவதி(கனடா), அரியதேவி(கனடா), கமலாதேவி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றவிகா, கஜித், சாய்பிரசாத், சிலக்சா, சைலன், சயன், அநயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் மற்றும் எமது கிராமக்கள் அனைவருக்கும் அறியத்தருவதுடன்

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமதுகிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரத்திக்கின்றது. 

Last Updated (Friday, 22 February 2019 16:53)