மரண அறிவித்தல் - வேலுப்பிள்ளை கார்த்திகேசு 25.01.2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், கொடுக்குளாய் வீதி ஆழியவளையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கார்த்திகேசு அவர்கள் 25-01-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்ற நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும், கனகம்மா(இலங்கை), பவா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான ஏரம்பு, கற்பகம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
 
நவரத்தினம்(இலங்கை), நிதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
மாலதி, மோகன், சுகுமார், கவிதா, சுலக்‌ஷனா, சிவகுமார், சுமங்கலி, முருகவேல், அஜி, சத்தியா, அஜந்த், நிது ஆகியோரின் அன்புப் பேரனும், அபிலாஸ், மிதுலா, சுவேதா, சஞ்ஜய், சஜானா, ஜனோசன், பிரியாஸ், கவினா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். 
 
அன்னாரது இறுதிக்கிரியை 27.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10 : 00  மணியள்வில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அன்னாரது பூதவுடல் கொடுக்கிளாய் இந்துமயானத்தில் நல்லடக்கம்  செய்யப்படும்.  அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தின்றது. 

Last Updated (Saturday, 26 January 2019 04:25)