மரண அறிவித்தல்:- கந்தையா கணபதிப்பிள்ளை (வெள்ளையப்பா) 14.12.2017 இன்று அவரது இல்லத்தில் காலமானார்.

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கணபதிப்பிள்ளை (வெள்ளையப்பா) 14.12.2017 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் காலமானார்.

அன்னார் அமரர் கந்தையா அவர்களின் அன்பு மகனும்,
அமரர் மனோரஞ்சிதம் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்புக்கணவரும்,
இராசகுலசிங்கம், இராசலிங்கம், இராசசிங்கம், அமரர் ரூபர்ணதேவி, வனராணி, சண்முகராஜன் ஆகியோர்களின் அன்புத்தந்தையுமாவார்

 அன்னாரது இறுதிக்கிரியை 15.12.2017 வெள்ளிக்கிழமை அன்று 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊர்வலமாக நாகர்கோவில் நிரந்தர வதிவிடத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் நாகர்கோவில் மேற்கு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராமமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் ,கொம் எமதுகிராமமக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றது.