10.09.2011 அன்று இராசையா தணிக்காசலம் காலமார்.

மரண அறிவித்தல்

 

       நாகர்கோவிலை பிறப்பிடமாகவும் புனிதநகர் கற்கோவளம் பருத்தித்துறையை வதிவிடமாகவும்கொண்ட  இராசையா தணிகாசலம் 10.09.2011 சனிக்கிழமை தெல்லிப்பளை வைத்தியசாலையில் காலமானார். காலம்சென்ற இவர் கடந்த சிலவாரங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு தனக்குள் தானே பிதர்த்திக்கொண்டு நடமாடிய இவர் நேற்றுமுன்தினம் தனக்குத்தெரியாமலும் அயலவர்களுக்கும் தெரியாமல் தெல்லிப்பளைக்கு பயணம்செய்துள்ளார். இவருக்கு தெல்லிப்பளையில் கடும் சுகையீனம் அடைந்துள்ளதை அறிந்த பொலிஸ் அதிகாரிகள் தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றுள்ளார்கள். அதன்பின்னர் யாழ்பாணம் போதனாவைத்தியசாலைக்கு மேலதிகசிகிச்சைக்காக கொண்டுசென்று சிகிச்சைசெய்துவந்தபோது சிச்சை பயனளிக்காது அகாலமரணமடைந்துள்ளார்.

            அதன்பின்னர் தெல்லிப்பளை பொலிஸ். உறவினர்களை விசாரித்தபோது பிள்ளைகளின் விபரங்களை அறிந்து அவர்களுக்கு உருயமுறையில் தகவல் அனுப்பிவைத்துள்ளார்கள். அதன்பின்னர் இன்று 11.09.2011 உறவினர், பிள்ளைகளிடம் கயளிக்கப்பட்டு கற்கோவளம் புனிதநகரில் வசிக்கும் அவரது சகோதரியான யோகலிங்கம் காந்தியினுடைய இல்லத்தில் 11.09.2011 மாலை 5.30 மணியளவில் ஆனைவிளுந்தான் இந்துமயானத்தில் இறுதிக்க்கிரியைகள் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.

 

Last Updated (Sunday, 11 September 2011 14:57)