இரத்தினையா கமலாம்மா 03.04.2013 காலமானார்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையாதேவஸ்தான பரம்பரை பூஜகரான கணேசையர் அவர்களின் துணைவியார் காலமானார்.

கரணவாய் கிழக்கு சிவன்கோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கணேசையர் கமலாம்மா 03.04.2013 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார். அன்னார் காலம்சென்ற கனகசபாபதி குருக்கள், இராசமணியம்மாவின் பாசமிகு மகளும், கரணவாய் சிவன்கோவில் தலைவரும் பூஜகருமான இரத்தினையாவின் மனைவியும், சிவனேசக்குருக்கள் (பருத்தித்துறை சிவன்கோவில்) வதனமலர், அனுஷியாதேவி, ரேணுகாதேவி ஆகியோரின் அன்புத்தாயாரும், பிரியதர்ஷினி, நாகேஸ்வரக்குருக்கள், கிருஷ்ணபவானந்தக்குருக்கள், சோமஸ்கந்தசர்மா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரது பூதவுடல் 04.04.2013 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் தகனக்கிரியைக்காக கிராய் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதையும் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

 

தகவல்:- நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாகசபையினர்

Last Updated (Thursday, 04 April 2013 10:03)