கணபதிப்பிள்ளை பாலசுந்தரம் 10.03.2013 அன்று காலமானார்


 
                    
நாகர்கோவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், குடத்தனை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலசுந்தரம் (சிவகுரு)அவர்கள் 10-03-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அலரிவிதை உட்கொண்டதை கண்ட குடும்பத்தினர் மந்திகைபோதனாவைத்தியசாலைக்கு கொண்டுசென்று சுமார் ஒருமணித்தியாலம் வரையில் சிகிச்சைநடைபெற்றுவந்தவேளையில் சிகிச்சைபயனளிக்காது துர்மரணம் அடைந்தார்.

காலம் சென்ற கணபதிப்பிள்ளை , காளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்

காலம் சென்ற ரோமாம்பிள்ளை, செகமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்

செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தேவலிங்கம் ,தேவறஞ்சினி ,தேமசவமாலினி ,தயாபரன் ,தேவசீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

காலம் சென்ற மாசிலாமணி (மாசிலா) காலம் சென்ற புனிதவதி ,கண்ணகை (அன்னக்கண்டு) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் திங்கட்கிழமை காலை 11.30 மணிளவில் வசிப்படமான குடத்தனையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு நாகர்கோவில் சவேரியார் தேவாலயத்தில் இறுதிசசடங்குகள் இடம்பெற்று பின்னர் நாகர்கோவில் கிறிஸ்தவ சவக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரது குடும்பத்தினருக்கு நாகர்மண்ல்டொட்கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றதோடு, இறைவனடி சேர்ந்த ஆத்மா சாந்தியடைய எல்லோரும் இறைவனை பிரார்த்திப்போமாக.

Last Updated (Monday, 11 March 2013 05:24)