நாகர்கோவில் கல்விநிலைய இரண்டாம் ஆண்டு நிறைவு விழா

நாகர்கோவில் கல்வி நிலையத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா கடந்த 17.01.2015 சனிக்கிழமை அன்று நாகர்கோவில் மகாவித்தியாலய மண்டபத்தில் மிகவும் எழிமையான முறையில் ஆடம்பரங்கள் ஏதுவுமின்றி குறைந்த செலவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் தலைவராக கல்விநிலைய ஒருங்கிணைப்பாளர் செல்வி கந்தசாமி அன்னலட்சுமி, பிரதம விருந்தினராக நாகர்கோவில் மகாவித்தியாலய அதிபர் திரு சிவசங்கர், சிறப்பு விருந்தினர்களாக நாகர்கோவில் கிழக்கு, மேற்கு கிராம அலுவலர்கள் திரு தோமஸ் யூட், சுபகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மிகவும் அழகாக  இந்நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் ஆரம்பமாகியது.

தலைமை உரையில் செல்வி அன்னலட்சுமி கந்தசாமி அவர்கள் இக்கல்வி நிலயத்திற்கு மாதாந்த அனுசரணையாளர்கட்கு நன்றிகூறி அவர்களின் பெயர்விபரங்கள் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. மற்றும் பலபல அறிவுறுத்தல்களை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் வழங்கினார் அவற்றில் தரம் ஐந்து புலமைப்பரிசில் சித்தியடையும் முதல் மாணவிக்கு பணப்பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆகவே நான் நீ என்று அனைத்துமாணவர்களும் போட்டி போட்டு படிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

சிறப்புரையில் கிராம அலுவலர் திரு தோமஸ் யூட் அவர்கள் கூறியுள்ள ஆழமான கருத்து.... நான் எத்தனையோ இடங்களில் கிராமசேவையாளராக கடமையாற்றிவந்துள்ளேன் ஆனால் இந்த நாகர்கோவில் கிராமத்தில் பிள்ளைகளின் கல்விக்காக புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் இப்படி பணத்தினை வாரிவழங்கியதை எந்தவொரு கிராமத்திலும் பார்க்கவில்லை நீங்கள் பெற்ற பிள்ளைகள் மீது முகம்தெரியாத உறவுகளுக்கு உள்ள அக்கறையும் கல்வி வளர்ச்சியிலுள்ள பற்றும் பெற்றெடுத்த உங்களுக்கு ஏன் இல்லை??????? என்று பெற்றோரிடம் கேட்டுக்கொண்டார் காரணம் பிள்ளைகளை சரியான முறையில் பாடசாலைக்கோ, கல்விநிலையத்திற்கோ அனுப்புவதில்லை ஆகவே உங்களுக்கு சகல உதவிகளையும் புலம்பெயர்ந்த உறவுகள் வழங்குவதற்கு நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் அதுதான் உண்மை எனவே புலம்பெயர்ந்த உறவுகளுக்ககவாவது இந்த கிராம மாணவர்களை நாம் அனைவரும் கல்வியில் மேலோங்கசெய்து அவர்களின் ஆசைகளை நிறவேற்றவேண்டும் என்று மிகவும் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். கிராம அலுவலர் திரு தோமஸ் யூட் ஐயா அவர்கள்.

அதனைத்தொடர்ந்து பெற்றோர் சார்பாக உரையாற்றுகையில் தோமஸ் யூட் ஐயா அவர்கள் கூறியதை முழு மனதோடு ஏற்றுக்கொள்கின்றோம் என கூறியதற்கு சபையில் பெற்றோர்கள் அதனை ஏற்றுக்கொண்டு புலம்பெயர்ந்த உறவுகளுக்கு நாம் நன்றி கூறவேண்டுமாயின் அவற்றை பிள்ளைகளை கல்வி வளர்ச்சியில் வெற்றிபெற்றச்செய்து அவர்களுக்கு திருப்தியளிப்பதே அவர்களுக்கு பெற்றோர்களாகிய நாங்கள் கூறும் நன்றி என பெற்றோர் உரையில் கூறியுள்ளார்.

பிரதமர் உரையில் திரு சிவசங்கர் அவர்கள் தனது வேதனைகளை கிராம அலுவலர் மிகவும் தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார் என்று கூறி நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் இக்கிராம மக்களின் ஒத்துழைப்பு போதாது என்று மிகவேதனையுடன் கூறியுள்ளார் என்னுடன் நீங்களும் இணைந்து இப்பாடசாலயின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

பின்னர் பல நிகழ்வுகள் நடைபெற்றது அந்தவரிசையில்

செல்வன் து.மகிந்தன் அவர்களால் முதலாம் அதிகாரத்திலுள்ள 10 குறள்களும் மிகவும் அழகாகவும், ஆணித்தரமாகவும் வழங்கப்பட்டது.

 

அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார்.

தனக்குவமை இல்லாதான் தாழ்சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

அறவாழி அந்தணன் தாழ்சேர்ந்தார்கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத்தலை.

பிறவிப்பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேராதார்.

திருக்குறளினை மனப்பாடம் செய்து தெளிவாக ஒப்புவித்தார் செல்வன் துளசிராமன் மகிந்தன்

அதனைத்தொடர்ந்து கவிதை வழங்கப்பட்டது.

 

 

செல்வி கு.கஜனி அவர்களின் கவிதை

 

முத்தமிழ் சபை தன்னில்

எத்தனை எத்தனை முகம் தெரினும்

அத்தனை முகங்களுக்கும்

இந்நேர வந்தனங்கள்.

உங்கள் முந்நிலையில்

நான் கவி படிக்க வந்துள்ளேன்...

கவியின் தலைப்பு
கல்விநிலையம்.....

சிட்டுக்குருவிகளாய் சிறகடித்து
திரிகின்ற சிறார்கள் நாம்
பல வருடங்களிற்கு பின்னர்
மீள்குடியேறியும் கல்விப்பாதையில்
முன்னேற வழிதெரியாது
தவித்த வேளையில


 இருவருடத்தில்
ஐந்து ஆசிரியர்கள் தோழர்களாய்
தோழ்கொடுத்து
புலம்பெயர்ந்த உறவுகளும்
கருணையுடன் கரம் நீட்டி
குறுகிய காலத்தில் குதூகலிப்புடன்
கல்வி தந்த கல்வி நிலையம்
நாகர்கோவில் கல்வி நிலையம்
வாழ்க என்றும் எம் கல்வி நிலையம்
வளர்க உன்சேவை மேலும்
என்று வாழ்த்துகின்றோம்.

என்று மிகவும் ஆழமான கருத்தினைக்கொண்ட கவிதையினை வழங்கியுள்ளார் செல்வி குலவீரசிங்கம் கஜனி.

அதனைத்தொடர்ந்து செல்வி யோகநாதன் சாருஜா அவர்களால் சுயசரிதை வழங்கப்பட்டது. 

எனது பெயர் சாருஜா நான் நாகர்கோவில் மகாவித்தியால மாணவி நான் தரம் நான்கில் கல்வி கற்கின்றேன் நான் மாலை நேரத்தில் நாகர்கோவில் கல்விநிலையத்தில் கல்வி பயில்கின்றேன் இங்கு தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவர்கள் கல்வி பனயில்கின்றனர் எங்கள் கல்வி நிலையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஐந்து ஆசிரியர்கள் எங்களுக்கு கல்வி போதிக்கின்றனர். நான் ஒருநாளும் தவறாமல் கல்வி கற்கச்செல்வேன். எனக்கும் கல்வி என்பது மிகவும் விருப்பமான ஒன்றாகும். எனது பெற்றோர் என்னை ஒருநாளும் பாடசாலைக்கும், கல்விநிலையத்துக்கும் செல்லாமல் இருக்க அனுமதிப்பதில்லை. ஏதாவது காரணங்களுக்காக அவர்கள் சிலவேளைகளில் கல்விக்கூடத்திற்கு போகவேண்டம் என்றாலும் நான்கேட்பதில்லை. இக்கல்வி நிலையத்திற்கு வெளிநாட்டில் வாழும் எமது ஊர்மக்கள் உதவி புரிகின்றார்கள். எமக்குவேண்டிய பாடசாலை உபகரணங்களை அவர்கள் வழங்குகின்றார்கள். எங்கள் ஆசிரியர்கள் எமக்கு போட்டிகள் வைத்து பரிசில்கள் வழங்குவர். நான் சென்ற வருடம் இக்கல்வி நிலையத்தில் மணியப்பா அவர்களின் நினைவாக நடாத்தப்பட்ட பொதறிவுப்போட்டியில் வகுப்பில் முதலாம் இடத்தினைப்பெற்றமைக்காக ஐயாயிரம் ரூபா பணமும், எல்லா மாணவர்களை விட கூடுதலான புள்ளிகளை பெற்றாமைக்காக விசேட பரிசாக ரூபா பத்தாயிரமும் மொத்தமாக ரூபா பதினைந்தாயிரம் பெற்றுக்கொண்டேன் இன்னும் பல போட்டிகளில் சிறுசிறு பரிசில்களை வாங்கியுள்ளேன். இன்னும் பல மாணவர்கள் வெற்றிபெற்ற அடிப்படையில் பரிசில்களை பெற்றுக்கொண்டனர். எங்கள் ஆசிரியர்கள் எமக்கு பல புத்திமதிகளை கூறுவார்கள். நாங்கள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக வரவேண்டுமென்பதே அவர்களின் விருப்பம். நானும் இங்கு கல்வி பயிலும் ஏனைய மாணவர்களும் கல்வியிலும் பண்பாட்டிலும் சிறந்தவர்களாக வருவதற்கு பெரியோர்களாகிய உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பையும் ஆசியையும் வேண்டி நிற்கின்றேன். எங்கள் கிராமம் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விழங்கும் காலம் வெகுவிரைவில் உண்டாகும் எனக்கூறி விடைபெறுகின்றேன்

நன்றி

என்று இக்கல்விநிலையத்தின் செயல்பாட்டினையும் புலம்பெயர்ந்த உறவுகளின் உதவிகளையும் பற்றி இச்சுயசரிதையில் மிகவும் ஆழமான முறையில் கூறியுள்ளார் செல்வி சாருஜா.

அதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கி. நன்றி உரையுடன் இந்நிகழ்வு குறித்த நேரத்தில் நிறைவடைந்தது.

Last Updated (Thursday, 05 February 2015 07:44)