கெளத்தந்துறை பிள்ளையார் ஆலய தைமாத சதுர்த்தி திருவிழா.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு கெளத்தந்துறைப்பிள்ளையார் ஆலயத்தில் 23.01.2015 இன்று வெள்ளிக்கிழமை தைமாத சதுர்த்தி திருவிழா விமர்சயாக நடைபெற்றது.புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

காலை 9:00 மணியளவில் ஆரம்பித்த பிள்ளையார் புராணபடன நிகழ்வு பிற்பகல் 1:30 மணியளவில் நிறைவுபெற்றது.
அதனைத்தொடர்ந்து விநாயகப்பெருமானுக்கு ஸ்நபனாபிஷேகம் நடைபெற்று விசேட பூஜை இடம்பெற்றது.

பி.ப 3:00 மணியளவில் வசந்தமண்டப பூஜை நடைபெற்று விநாயகப்பெருமான் உள்வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

 

 

அபிஷேகம், விசேட பூஜை, விக்கிரக அலங்காரம் ஆகியவற்றை ஆலய பிரதம குருக்கள் நாராயணசர்மா திறம்பட நடாத்தினார்.

அதனைத்தொடர்ந்து அடியார்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் மாலை 4:00 மணியளவில் திருவிழா இனிதே நிறைவெய்தியது.

குறிப்பு :- இன்று 14 நாட்கள் முன்னறிவித்தலுடன் ஏற்பாடு செய்திருந்த ஆலய பொதுச்சபைக்கூட்டம் போதுமான அங்கத்தவர்கள் வருகைதராமையினால் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated (Friday, 23 January 2015 17:11)