புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவச்செல்வங்களின் 24ம் ஆண்டு நினைவுதினம். 2019

நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் கடந்த 1995ம் ஆண்டு புரட்டாதி மாதம் 22ம் திகதி இலங்கை விமானப்படையினரின் புக்காரா விமானம் நடார்த்திய குண்டுத்தாக்குதலில் பரிதாபகரமாக உயிர் நீத்த 21 மாணவச்செல்வங்களின் 24ம் ஆண்டு நினைவெளுச்சி 22.09.2019 அன்றயதினம் மிகுந்த உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. புகைப்படங்கள்>>>

பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர்களின் கதறல்கள் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் அனைவரினதும் கதறல்களுடன் இந்நினைவேந்தல் மெளனமாக நடைபெற்றது. கடந்த வருடங்களைவிட இவ்வாண்டு எவ்வித குறைகளும் இன்றி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பலதரப்பட்டவர்களின் அனுதாப உரை இடம்பெற்றது. அவ்வுரையில் எமது கிராமத்தைச்சேர்ந்த பழையமாணவனான ஆனந்தராசா சுரேஸ்குமார் அவர்களின் அனுதாப உரையில் 21 மாணவர்களின் மரணமானது எவ்வளவு கோரமான முறையில் நடந்தது என்பதனைஇன்றையமாணவர்களின் கண்முன்னேகொண்டுவந்தார்.  இக்குண்டுத்தாக்குதலை உணராதவர்களுக்கு அது ஒரு விழக்க உரையாகவும் அமைந்தது வரவேற்க்கத்தக்கது.