15.10.2011 அன்று நடைபெற்ற தீர்த்தோற்சவ விழா புகைப்படம்

 புகைப்படத்தொகுப்பு

               கர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் 15.10.2011 சனிக்கிழமை இன்று மிகவும் சிறப்பானமுறையில் திருவிழா கொண்டாடப்பட்டது.

           சென்றவருடம்போல் இந்தவருடமும் ஆடம்பரமாக செய்யமுடியாமல் போனாலும் வழமைபோல் இந்தவருடமும் பக்தகோடிகள் திரள்திரளாக வந்து எம்பெருமானின் திருவிழாக்கோலத்தை கண்டுகளித்தனர். இந்த வருடம் கொண்டாடப்பட்ட திருவிழாக்களில்  சென்ற ஒன்பது திருவிழாவிற்கு ஆலயத்திற்கு வந்த பக்த்தர்கள் மிகமிக குறைவாக காணப்பட்டதனால் பத்தாம் திருவிழாவான இன்று தீர்த்தோற்சவத்திருவிழாவிற்கும் பக்தர்கள் சாதாரணமாகத்தான் வருவார்கள் என எண்ணி சுமார் 200 கிலோ அரிசி அன்னதானத்தை தயார் செய்தார்கள். ஆனால் எதிர்பாரத அளவிற்கு மேலாக பக்த்தகோடிகள் திரள்திரளாக பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்திற்கு வந்தமையினால் பக்த்தர்களின் தொகையினை கருத்தில்கொண்டு மேலதிகமாக கொண்டுவந்த அன்னதான பொருட்களை தொண்டர்கள் சமைத்து எம்பெருமானை தரிசிக்க வந்த அடியார்கள் பசியாறி எம்பெருமானின் ஆலயத்தைவிட்டு அவர்களது இல்லம்செல்லும்போதும் வீட்டில் உள்ளவர்களுக்கும் எம்பெருமானின் அருள்கிடைக்கவேண்டி அன்னதான பிரசாதத்தையும் கொண்டுசென்றார்கள்.

இதைவிட ஆலயத்திற்கு கச்சான் கடைகள், ஐஸ்கிறீம்கடை, பூந்திவகைகள், மற்றும் அழகுப்பொருட்கள் (மணிக்கடைகள்) என ஆலயத்திருவிழாவை அலங்கரிக்கும் வகையில் அனைத்துக் கடைகளும் அமைக்கப்பட்டு இத்திருவிழாவை சிறப்பித்தார்கள். அதைவிட ஆலயத்தில் பக்த்தகூட்டம் அதிகமானதினால் அவசர சிக்கிச்சைக்காக  வைத்தியர்களால் அம்புலன்ஸ் ஒன்று ஆலயத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டது.

2011 ம் ஆண்டு தீர்த்தோற்சவ விழாவை வர்ணிப்பதினைவிட.  புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் மெய்யடியார்களே இன்று நடைபெற்ற இந்தவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காணலாம்.

Last Updated (Friday, 21 October 2011 00:08)