நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மகா கும்பாபிஷேகப் பெருவிழா அறிவித்தல்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் விகாரி வருடம் ஆனி மாதம் 26ம்(11-07-2019) திகதி வியாழக்கிழமை  நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது என்பதை உள்ளூர், புலம்பெயர் அடியார் பெருமக்களுக்கு மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

முதற்கட்டமாக எதிர்வரும் 24-03- 2019 ஞாயிற்றுக்கிழமை பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என்பதையும் எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

இராஜகோபுரப் பணிகள், சுற்றுப்பிரகார நிலம் போடும் பணிகள் மற்றும் நவக்கிரக ஆலயம், சண்டேஸ்வரர் ஆலயம் அமைக்கும் பணிகள் என்பன முடிவுறும் தறுவாயில் உள்ளது என்பதையும் அறியத்தருக்கின்றோம்.

கும்பாபிஷேக கிரியைகள் நவ குண்டங்கள் அமைத்து விசேடமாக செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேக விழாவுக்குரிய செலவீன நிதித்தொகையை எம்பெருமான் உள்ளூர், வெளிநாட்டு அடியார் பெருமக்களிடம் தந்துதவுமாறு வேண்டுகின்றோம்.

இதுவரை திருப்பணி வேலைகளுக்குரிய நிதிநன்கொடைகளை மனமுவந்து வழங்கியது போன்று கும்பாபிஷேகத்திற்கு தேவையான நிதித்தொகையையும் அள்ளி வழங்குவதுடன், தாங்கள் ஒவ்வொருவரும் எம்பெருமானின் கும்பாபிஷேக விழாவில் வந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.

அடியார் பெருமக்களே!

ஆலய நிர்வாகசபையினரின் வேண்டுதலை ஏற்று உரியகாலத்தில் தேவையான நிதி நன்கொடைகளை வழங்கி எம்பெருமானது கும்பாபிஷேக பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கி, எல்லாம் வல்ல வள்ளி தேவசேனா சமேத முருகையாவின் திருவருளைப் பெற்றுய்யுமாறு தங்களை மிகமிகத் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

நிதி சேகரிப்பதற்காக பிரித்தானியாவில் திரு ஆறுமுகம் – சுந்தரலிங்கம் அவர்களையும், திரு. குமாரசாமி விஜயகுமார் அவர்களையும், திரு. கந்தையா சின்னராசா(புஷ்பராசா) அவர்களையும்

அவுஸ்திரேலியாவில் திரு. ஆறுமுகம் மயில்வாகனம் அவர்களையும்,

சுவிற்சர்லாந்தில் திரு சுந்தரலிங்கம் தர்மராசா அவர்களையும்,

மேற்குறிப்பிட்ட நிதி சேகரிக்கும் அடியார்களிடம் தாங்கள் கும்பாபிஷேகத்திற்கு வழங்கும் நிதி நன்கொடையை கொடுத்துதவுமாறு வேண்டுகின்றோம். தாங்கள் வழங்கும் பணத்திற்குரிய பற்றுச்சீட்டு உரிய காலத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

அத்துடன் ஏனைய புலம்பெயர் நாடுகளிலுள்ள எம்பெருமான் அடியார் பெருமக்கள் ஆலய வங்கிக்கணக்கிற்கு தங்களது நிதிநன்கொடைகளை அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம்.

நன்கொடை வழங்கும் அடியார்கள் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக்கணக்கு விபரம்

வங்கிக் கணக்கு விபரங்கள்

கொமர்சல் வங்கி (COMMERCIAL BANK)
பருத்தித்துறை கிளை.
கணக்கின் பெயர் – NAGARKOVIL NORTH ARULMIGU MURUGAIYA THEVASTHANAM- (RAJAGOPURA THIRUPANY FUND)
சேமிப்பு கணக்கு இலக்கம் – 8274000780

இலங்கை வங்கி.
பருத்தித்துறை கிளை –
கணக்கின் பெயர் – ARULMIGU MURUGAIYA THEVASTHANAM
01. சேமிப்புக் கணக்கு இலக்கம் – 73515574
02. நடைமுறைக் கணக்கு இல. – 79059813

தொடர்புகளுக்கு –

வெளிநாடு (சர்வதேசம்) – பொறுப்பாளர்

ஆறுமுகம் – சுந்தரலிங்கம்
தொலைபேசி இலக்கம் – 0044 7459219252

அவுஸ்திரேலியா – பொறுப்பாளர்
ஆறுமுகம் – மயில்வாகனம்
தொலைபேசி இலக்கம் – 0061 387075911

இலங்கை –

நாகதம்பி  குமரேசு – நிர்வாக சபை தலைவர்- தொ.இல.  0094 776701175

சிவராசா கலீபன் – நிர்வாக சபை செயலாளர்- தொ.இல.- 0094 767659415

சிவப்பிரகாசம் சிவாயநம- நிர்வாக சபை பொருளாளர்- 0094 77 668 5054

விஜயகாந்தன் விக்கினேஸ்வரன் – உப தலைவர் – 0094  76 747 7319

சேதுலிங்கம் ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 76 706 2123

இராசையா ரவிச்சந்திரன் – உறுப்பினர் – 0094 77 087 1465

நடராசா செல்வராசா – உறுப்பினர் – 0094 77 543 5592

பரமானந்தராசா அருள்தாஸ் – உறுப்பினர் – 0094 77 324 0457

ஆறுமுகம் – நவரத்தினசாமி – போஷகர் – 0094 773548525

 

Last Updated (Monday, 25 March 2019 02:31)