நாகர்மணல் இணையத்தளம் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு உங்களது கருத்துக்களையும் அனுசரணையினையும் வழங்குமாறு வேண்டுகின்றோம்...

அன்பார்ந்த வாசகர்களே பொதுநோக்கம் கொண்ட அன்பு உள்ளங்களே அனவருக்கும் அன்பான வேண்டுகோள்! நாகர்மணல் என்னும் எமது கிராமத்து இணையத்தளமானது கிட்டத்தட்ட சுமார் பதினைந்து வருடங்களாக இயங்கி வருவது யாவரும் அறிவீர்கள்! இவ்விணையத்தளத்தில் பதிவேற்றப்படும் தகவல்கள் அனைத்திற்கும் எவ்வித கட்டணங்களும் அறவிடப்படவில்லை என்பதனையும் நன்கு அறிவீர்கள்! ஆகவே இவ்விணையத்தளத்திற்கு இதுவரைகாலமும் ஒருசில பொதுநோக்கம்

 கொண்ட உள்ளங்கள் தங்களது அனுசரணையினை வழங்கி ஊக்குவித்துள்ளார்கள் மேலும் அன்பர்கள் முன்வந்தும் இருக்கின்றார்கள். இருந்தும் இவ்விணையத்தளமானது எமது கிராமத்தின் ஒரு பொதுவான ஊடகமாக செயல்படும் நோக்கம் கொண்டதனால் அனைத்து பதிவேற்றங்களும் கட்டணமின்றி செய்யப்படுவதனால் தற்போது இவ்விணையத்தளத்தினை நடார்த்துவதற்கு ஒருவரை வேதனம் வழங்கி இடைவிடாது தகவல்களை பதிவேற்றம் செய்வதற்கு நாகர்மணல் நிர்வாகம் முடிவினை மேற்கொண்டுள்ளது. ஆகவே பொது நோக்கம் கொண்ட அனைத்து உள்ளங்களும் அனுசரணை வழங்கி இவ்விணையத்தளத்தினை திறன்பட செயல்படுத்த ஒத்துழைப்பு வழங்கும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரைகாலமும் அனுசரணை வழங்கிய அன்பு உள்ளங்கள்.
சிங்கராசா கெளரிதாசன்            லண்டன்
கண்ணையா பாஸ்கரன்            சுவீஸ்
ஆறுமுகம் நவரட்ணசாமி          கொழும்பு
பாலசுப்பிரமணியம் அருள்தரன்    சுவீஸ்
அழகராசா ஆறுமுகம்             லண்டன்
செகராசா அருந்தவச்செல்வன்     சுவீஸ்
பாலசுப்பிரமணியம் பாலேந்திரன்  அவுஸ்திரேலியா
கணேசமூர்த்தி நிஷாந்தன்        சுவீஸ்.

 

அனுசரணை வழங்க முன்வந்த உள்ளங்கள்.
மயில்வாகனம் கெங்காசுதன்   அவுஸ்திரேலியா
நாகமுத்து விநாயகமூர்த்தி     டென்மார்க்
கந்தசாமி பிரதீபன்            லண்டன்
மயில்வாகனம் சிவகரன்      லண்டன்

இப்பொதுநோக்கம் கொண்ட அன்பு உள்ளகளிற்கும் எமது கிராமமக்கள் சார்பாக மிகுந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம் 

  இக்கருத்தினை மக்களாகிய தங்களிடம் விடுக்கப்பட்டு உங்களின் பூரண கருத்துக்களின் பின்னரே நடைமுறை படுத்தப்படும். எனவே உங்களது கருத்துக்களை This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு:- இவ்விணையத்தளத்தினை யாராவது பொதுநோக்கம் கொண்டவர்கள் தொடர்ந்து செயல்ப்படுத்த விரும்பும் பட்சத்தில் இதுவரை காலமும் நடார்த்திய செலவீனத்தினை அறவீடு செய்து நாகர்மணல் இணையத்தளம் பூரணமாக தங்களிடம் கையளிக்கப்படும் என்பதனையும் மிகுந்த மனமகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

 நன்றி...

தகவல்:- நாகர்மணல் இணையத்தளம்