நாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப்போட்டி 2018.

நாகர்கோவில் வடக்கு, நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் கடந்த 21.02.2018 புதன்கிழமை நண்பகல் 1 மணியளவில் கடற்கரை புற்தரை மைதானத்தில் வருடாந்த இல்லமெய்வன்மைப்போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எமது பாடசாலையில் ஜிம் மாஸ்ரிக் மாணவர்கள் தங்களது அதிசிறந்த சாதனைகளை வெளிக்காட்டியது
 எமது பாடசாலைக்கு பெருமிதமூட்டியதாகும். அவர்களது சாதனை மேன்மேலும் வளர அனைவரும் அவர்களுக்கு பூரண ஆதரவு வழங்க முன்வரவேண்டும். அத்தோடு இந்த வருடம் முதன்மை பெற்ற இல்லத்திற்கான வெற்றிக்கேடயத்தினை மறைந்த இராசையா தளையசிங்கம் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.