அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் இன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 20.10.2017 வெள்ளிக்கிழமை இன்று கந்தசஷ்டி விரதம் காலை 10 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று கந்தப்புராண படலம் பாராயணம் செய்யப்பட்டு. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

 பின்னர் மாலை 5 மணிக்கு வசந்தமண்டப பூஜை நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வயானை சமேதராரக உள்வீதியுலா வலம்வந்த காட்சி மிகவும் பரவசமூட்டியது. இன்றைய விழா உபயகாரர் ஆறுமுகம் அழகராசா குடும்பத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.