நாகத்தொடுவாய் பாலம் வாகனம் செலுத்துமளவிற்கு பூர்த்தியாகும் நிலையை அடைந்துள்ளது.

நாகர்கோவில் வடக்கு கெளத்தந்துறை பிள்ளையார் ஆலய வீதியூடக கடற்கரைக்கு செல்வதற்கு நாகத்தொடுவாய் ஏரி இடையூறாக இருப்பதனை அவதானித்த எமது கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் எடுக்கப்பட்ட முயற்சி வீணடிக்கப்படவில்லை. உரிய அதிகாரிகளின் சிறு உதவியுடனும், 
புலத்தில் உள்ள உறவுகளின் உதவியுடனும், புலம்பெயர்ந்த உறவுகளின் நிதிப்பங்களிப்பிலும் 13 அடி அகலமாக பாலம் திறம்பட அமைக்கப்பட்டுள்ளது. இருந்து பூர்வீக நாகதம்பிரான் ஆலய தீர்த்த உறசவத்தின்போது எம்பெருமானை கடற்கரைக்கு கொண்டு செல்லும் அளவிற்கு இப்பாலம் விஸ்தரிக்கப்படவுள்ளது. அதற்கேற்ற அளவிற்கு பூர்த்தியாக்க சிறுதொகை பணம் தெவைப்படவுள்ளது. இதுவரையில் 90000.00 ரூபா வரை செலவாகியுள்ளது. இதற்கான உதவியை வழங்கி ஒத்துளைத்த உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகளை கிராம மக்கள் கூறக்கடமைப்பட்டுள்ளார்கள்.
 

இப்பாலத்திற்கு உதவியோர்கள். 

யோசெப்ஜோன்சன் தவக்குமார்              
திரவியம் அகிலன்        லண்டன்             
சின்னத்தம்பி ஜோதீஸ்வரன்   கனடா      
குமாரசாமி சிவகுமார்         கனடா     
நாகமுத்து விநாயகமூர்த்தி  டென்மார்க்

 

குறிப்பு:- தி.அகிலன் அவர்களால் எமது கிராம விளையாட்டுக்கழகங்களிடம் நிதிப்பங்களிப்பு பெற்றுத்தருவதாக சில தகவல்கள் கிடைத்துள்ளது. நிச்சயம் அதுநிறவேறி இப்பாலம் முற்றுமுழுதாக அமைக்கப்படும் என்ற நம்பிக்கயுடன் பொதுச்சேவையில் நாகர்கோவில் இளைஞர்கள்....