கெளத்தந்துறை பிள்ளையார் ஆலய வருடாந்த மணவாளக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.

நாகர்ககோவில் வடக்கு அருள்மிகு கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயத்தில் கடந்த 10.09.2017 அன்று வருடாந்த மணவாளக்கோல விழா காலை 10 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி 1008 சங்குகளினால் அபிஷேகம் நடைபெற்று அதனைத்தொடர்ந்து விஷேட பூஜைகள் நடைபெற்று சுமார் 2 மணியளவில் பகல் பூஜைகள் நிறாஇவடைந்து....புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
 அடியார்களுக்கு விபூதிப்பிரசாதம் மற்று அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாலை சுமார் 6 மணியளவில் வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்று கெளத்தந்துறை விநாயகப்பெருமான் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட முத்துச்சப்பறாத்தில் வெளிவீதியுலா வலம்வந்து திருவூஞ்சல் ஆட்டி எம்பெருமான் அடியவர்களுக்கெல்லாம் நல்லருள் வழங்கி இருப்பிடம் அமர்ந்த காட்சி அடியவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.