நாகத்தொடுவாய்கான தற்காலிக பாலம் அமைத்தல்.

நீண்டகாலமாக நாகத்தொடுவாயினை கடந்து பல்வேறு தேவைகளுக்கும் கடற்கரைக்கு செல்வதற்கு  பெரும் சிரமத்தின் மத்தியில்  சென்றுவரவேண்டியுள்ளது. பலதடவைகள் இது தொடர்பான கோரிக்கைகள் உரியவர்களிடம் முன் வைக்கப்பட்டபோதும் இதுவரை குறித்த பாலம் அமைப்பதற்கான திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
 இதன் காரணமாக மருதங்கேணி பருத்தித்துறை வீதி புனர் நிர்மாணத்தின்போது கடந்தகாலங்கிளில் பாவனையில் இருந்த பாலத்துண்டங்கள் அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட பாலத்துண்டங்களை பயன்படுத்தி நாகத்தொடுவாய் பாலத்தினை தற்காலிகமாக அமைக்கலாம் என்கின்ற கருத்தினை இவ்வூர் இளைஞர்களால் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக பிரதேச செயலகத்தோடு தொடர்புகொண்டபோது அகற்றப்பட்ட பாலத்துண்டங்களை வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் இருந்து எடுப்பதற்கான அனுமதியினை பெற்றுத்தருவதாக கூறி அனுமதியினையும் பெற்றுத்துந்துள்ளனர்.

தற்போது ஒருபகுதி பாலத்துண்டங்கள் நாகத்தொடுவாய் பகுதிக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. மிகுதியை எடுத்துவருவதற்கான செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் குறித்த பாலத்தினை அமைப்பது தொடர்பான உங்களது கருத்துக்களையும், உங்களால் இயன்ற ஒத்துழைப்பினையும் எதிர்பார்க்கின்றோம்.

 

 

குறிப்பு:- இதுதொடர்பாக உங்களது கருத்துக்களையும் ஒத்துளைப்பினையும் மேற்கொள்வதற்கு இவர்களை அணுகவும்
இராசையா இரவிச்சந்திரன்  0094 778384893
தோமஸ் யூட்     0094 77 668 1528