ஆ.சுந்தரலிங்கம் அறத்தொண்டன் என கெளரவிப்பு

ஆறுமுகம் சுந்தரலிங்க என்னும் சின்னச்சம்மாட்டியார் என்பவருக்கு அறத்தொண்டன் என்கின்ற மாபெரும் பட்டம் சூட்டி கெளரவிக்கப்பட்டது. எவர் நாகர்கோவில் வடக்கு சம்மாட்டியார் என்று அழைக்கப்படும் திரு அழகராசா சம்மாட்டியாரின் உடன்பிறந்த சகோதரன் திரு ஆறுமுகம் சுந்தரலிங்கம் இவர் மிகுந்த பக்தியும் கிராம அக்கறையும் கொண்டவர் எனும் வகையில் (புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது)
 எமது கிராமத்தில் அமைந்துள்ள அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற. அமைக்கபடவுள்ள ஆலயங்களுக்கு புலம்பெயர்ந்த நாட்டில் இருந்து அடியார் பெருமக்களிடம் நிதிகளை சேகரித்து தமது சிறந்த சிவதொண்டினை நிலை நாட்டியுள்ளார் என்பதற்கமைவாக 04.11.2016 வெள்ளிக்கிழமை அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாகத்தினராலும் முருகப்பெருமான் அடியார் பெருமக்களாலும் திரு ஆ.சுந்தரலிங்கம் அவர்களுக்கு அறத்தொண்டன் என்கின்ற மாபெரும் சிறப்பு பட்டத்தினை வழங்கியது மட்டுமல்லாமல் வாழ்த்துக்களாலும் கவிதைகளாலும், மாலைகளாலும் கெள்ரவித்து சிறப்பித்தார்கள்.

குறிப்பு:- சிறப்புரையில் கலாச்சிசார உத்தியோகத்தரினால் குறிப்பிடப்பட்டது யாதெனில் இந்நிகழ்வானதை செய்வதனால் இவரது பணியினை இளஞ்சமுதாயத்தினரும் தொடர இது ஓர் பெரிய எடுத்துக்காட்டாக இருக்கும் என்றும் இவ்விழாவினை ஏற்பாடு செய்தவர்களை பாராட்ட கடைமைப்பட்டுள்ளேன்...ஏனெனில் தற்போது ஆண்மீகம் இளயசமுதாயத்தில் குன்றிக்காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.

Last Updated (Sunday, 06 November 2016 17:54)