பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் தீர்த்த உற்சவத்தின் போது காட்சி கொடுத்து அருள்வழங்கிய நாகேஸ்வரப்பெருமான்.

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தில் 10ம் நாள் சமுத்திரதீர்த்த உற்சவத்தினை நாகர்கோவில் வடக்கு மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடினார்கள். நாகேஸ்வரப்பெருமான் நாகர்கோவில் வடக்கு மக்களின் பக்தியினை ஏற்றுக்கொண்ட வகையில் காட்சி கொடுத்து அருள்பாலித்தார். அதிசயம் என்னவென்றால் நள்ளிரவு சுமார் 10 மணியளவில் ஆலய முன் வீதியில் விஷாலமாக நிற்கும் மருதமரத்தின் அதிஉச்சக்கிளையில் நாகேஸ்வரப்பெருமான் இருப்பதனை அந்தவேளையில் முதலில் கண்டது யார்??? உச்சிக்கிளையில் நாகேஸ்வரப்பெருமான் பார்வையிட கிளிக் பண்ணவும். Video 1, Video 2Video 3
என்று எவருக்குமே தெரியாத ஒருவிடயம் இதில் இருந்து நாம் உணர்ந்து கொண்டது நாகேஸ்வரப்பெருமான் வடக்கு மக்களின் திருவிழாவிற்கு பக்தர்களோடு இணைந்துகொண்டு தன்னையே பக்தர்களுக்கு அடையாளப்படுத்திவிட்டு மாயமாக மறைந்துள்ளார் ஆகவே நாகர்கோவில் வடக்கு மக்களின் திருவிழாவிற்கு பூர்வீக நாகதம்பிரான் மனித உருவெடுத்து கலந்து சிறப்பித்ததே நாகர்கோவில் வடக்கு மக்களின் பெரும்பாக்கியம் ஆகும். தீர்த்தமாடி நாகேஸ்வரப்பெருமான் ஆலயத்தை நோக்கி வரும்போது எம்பெருமானை சுமந்து வரும் அடியார் கூட்டம் தங்களது களைப்பினை மறப்பதற்கு கடந்த 4 வருடமாக அரோகரா கோஷம் போடுவதனை நிறுத்தி "நாகையா எங்கட பக்கம், நாகையா எங்கட பக்கம்" என்றே கோஷம் போட்டு சுமந்து வருகின்றனர் அதனை உறுதிப்படுத்தவே நாகர்கோவில் வடக்கு மக்களின் 10ம் நாள் தீர்த்த உற்சவத்திற்கு நாகேஸ்வரப்பெருமான் நான் என் பக்தர்கள் பக்கம் என்பதை வெளிப்படுத்தியதாகவே நினைத்து பக்தர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

Last Updated (Friday, 21 October 2016 08:40)