22.02.2016 அன்று மாசிமகம் மாமாங்க தீர்த்தம் எமது கிராமத்தில் பிரதான ஆலயங்களில் மிகவும் சிறப்பாகவும், ஆரவாரத்துடனும் நடைபெற்றது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடிவரும் மாசிமகமாகிய இத்திதியில் மாமாங்கதீர்த்தம் இந்துசமுத்திரத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த தினமாகிய நாள் கடந்த 22.02.2016 ஞாயிற்றுக்கிழமை எமது கிராமத்தில் உள்ள பிரதான ஆலயங்களாக விழங்கும் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம், கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயம், அருள்மிகு முருகையா ஆலயம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம், கண்ணகை அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்களில். புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
 அதிகாலை 2;30 மணிக்கு அபிஷேகம் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து விஷேட பூஜைகள் நடைபெற்று, எம்பெருமான் உள்வீதி வலவந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட  உழவு இயந்திரத்தில் அமர்த்தி ஒன்றன் பின் ஒன்றாக இந்துசமுத்திரத்தை நோக்கிச் சென்றுள்ள காட்சி காண்போர் மனங்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அதிகாலை 6:00 மணிக்கு மாமாங்க தீர்த்தம் அடியவர்களின் அரோகரா கோஷத்துடன் சிறப்பாக நடைபெற்றது.

Last Updated (Saturday, 27 February 2016 05:12)