20.01.2016 புதன்கிழமை திருவிளம் போடப்பட்டு, இவ்வாண்டு பிரதிந்திகள் தெரிவு செய்யப்பட்டன, 23.01.2016 நாட்தொழில் ஆரம்பம்.

நாகர்கோவில் வட்க்கு மக்களால்  தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற பாரம்பரியங்களில் மிகவும் சுவாரசியமான விடயம், நாட்சீட்டு போட்டு கடற்றொழிலாளர்கள் ஒன்றாக இணைந்து தமது மீன்பிடித்தொழிலினை ஆரம்பிக்கும் நாளே வடக்கு மக்களின் மிகச்சிறாந்த விழாவாகும்.

கடந்த 20.01.2016 புதன்கிழமை அன்று கரவலை சம்மாட்டிமார்களில் மூவரை எமது கிராமத்தின் பிரதி நிதிகளாக பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்தில் வைத்து சீட்டிழுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்டது. அவற்றில் 2016ம் ஆண்டிற்கான பிரதிநிதிகளாக தர்மராசா விக்கினேஸ்வரன், தங்கராசா குலவீரசிங்கம், சின்னத்தம்பி சுகந்தன் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

அதனைத்தொடர்ந்து எதிர்வரும் 23.01.2016 சனிக்கிழமை அன்று நாகர்கோவில் வடக்கு மக்களின் பாரம்பரிய தொழிலாகிய கடற்றொழிலை அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து ஆரம்பிக்கவுள்ளார்கள். இந்நந்நாளே மீனவர்கள் சிறந்து விழங்கும் பொன்னாளே ஆகும்....

 

Last Updated (Friday, 22 January 2016 03:25)