யாழ்/நாகர்கோவில் மகாவித்தியாலயம் ஆசிரியர் தினம் 2010 - ( படங்கள் இணைப்பு)

யாழ்/நாகர்கோவில் மகாவித்தியாலயம் இடம் பெயர்ந்து கற்கோவளம் புனிதநகர் பருத்தித்துறையில் இயங்கிவருகின்றது. 2000 ஆண்டு தொடக்கம் 2010  இது வரையில் சிறப்பாக நடார்த்தப்படாத ஒரு ஆசிரியர்தின விழாவை இந்தவருடம் (அதாவது) 06.10.2010 இன்று பாடசாலை அதிபர் திரு க.கண்ணன் அவர்களின் விருப்பத்திற்கிணங்க பழையமாணவர்கள் முன்னெடுத்து மிகவும்சிறப்பாக இவ்விழாவை கொண்டாடினர். (படங்கள் இணைப்பு)

பழைய மாணவர்கள் முன்வந்து இவ் ஆசிரியர்தின விழாவினை நடார்த்தவேண்டும் என பாடசாலை அதிபரிடம் கேட்டபோது அவர் மிகுந்த ஆனந்தமடைந்து மனமகிழ்வுடன் சம்மதம் கொடுத்தார். அதன் பிரகாரம் விழா நிகழ்வுகளை தயார் செய்து அதன்படி குறிப்பிட்ட நேரத்திற்கு பாடசாலை நுளைவாயிலில் இருந்து ஆசிரியர்களை மாணவர்கள் பூமாலை அணிவித்து அனைத்துமாணவர்களும் வரிசைக்கிரமமாய் நின்று பூக்களைதூவி மண்டபத்தினுள் அழைத்துச்சென்றனர். அக்காட்சி  கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.

ஆசிரியர்களை ஆசனங்களில் அமரவைத்த மாணவர்கள் அவர்களை வணங்கியதோடு கவிதைகள், பாமாலைகள் கொண்டு வாழ்த்துக்கூறி மகிழ்வோடு கெளரவித்தார்கள். பின்னர் தலமையுரையினை பாடசாலை அதிபர் திரு க.கண்ணான் அவர்களால் வழங்கப்பட்டது. அவ்வுரையில் மாணவர்கட்கும் பெற்றோர்களுக்கும் பற்பல நற்கருத்துக்களையும் இவ்வாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 3 மாணவர்கள் 100 க்கு மேல் புள்ளிகைப்பெற்றுள்ளார்கள் என்றும் இனிவரும் காலங்களில் படிப்படியாக அதிகரிக்கும் எனவும் கூறினார்.

அதனைத்தொடர்ந்து 1994 ம் ஆண்டு நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் என்னிடம் கல்விகற்ற மாணவி இன்று இப்பாடசாலையில் என்னுடன் ஆசிரியராக கடமையாற்றுவதையிட்டு நான் மிகவும் பெருமையடைகின்றேன் என்றும் இவ்விழாவை சிறப்பாக நடார்த்த முன்வந்த அனைவருக்கும் நன்றிகளையும் கூறி விடைபெற்றார்.

அவரைத்தொடர்ந்து உப அதிபரின் உரையும், ஆசிரியர்களின் உரையும் இடம்பெற்று. இறுதியாக தலமை மாணவியின் நன்றியுரையும் இடம்பெற்றது. நன்றியுரையில் கூறப்பட்ட விடயங்களாவன.

1) ஆசிரியர்களுக்கு அன்பளிப்புப்பொருட்களை திரு.நாகமுத்து விநாயகமூர்த்தி (டென்மார்க்கில் வசிப்பவர்) வழங்கினார்.

2) திரு.தனபாலசிங்கம் பரமானந்தராசா ஒலிபெருக்கி சேவையினை அன்பளிப்புச் செய்துள்ளார்.

3) நாகர்கோவில் நாகேஸ்வரா படப்பிடிப்பாளர் திரு.பாலசுப்பிரமணியம் அருணகிரி அவர்கள் புகைப்பட சேவையினை ஒழுங்கமைத்துத்தந்துள்ளார்.

4) சிற்றுண்டி வகையினை பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் திரு த. வதனராசா அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்ட அனைவற்கும்  மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டன. இத்துடன் ஆசிரியர் கெளரவிப்பு விழா இனிதே நிறைவுற்றது.

பின்குறிப்பு:-

   அதிபர்-எமது பாடசாலை மாணவர்களின் கல்வி,கலை போன்றவற்றின் வளர்ச்சிக்காக முக்கியமான சிலபொருட்கள் தேவைப்படுகின்றன, யாரவது முன்வந்து அக்குறைகளை நிவர்த்திசெய்வீர்களென கேட்டுக்கொள்கின்றேன். பிள்ளைகளின் நலன்கருதி போட்டோக்கொப்பி இயந்திரம், பாண்ட் வாத்திய குழுவினரினர் அணியும் சீருடை, ஒலிபெருக்கி என்பன தேவைப்படுகின்றது. இவற்றுள் ஒலிபெருக்கியை திரு நாகமுத்து விநாயகமூர்த்தி அவர்கள் அன்பளிப்புச்செய்வதாக கூறியுள்ளார். இவர் சென்றவாரம் சிறீலங்கா தொலைத்தொடர்பு இணைப்பு ஒன்றையும், வலைய இணப்பினையும் அன்பளிப்புச்செய்துள்ளார். இதேபோன்று அக்கறையும் , பற்றும் உள்ள எமதுகிராமத்து மக்கள் அனைவரும் முன்வந்து உதவிசெய்வீர்களென நாகர்கோவில் மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் நம்பிக்கையுடனும் ஆவலுடனும் எதிர்பார்த்துக்காத்திருக்கின்றனர்

 

 

நன்றி