பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் மீண்டும் திருடர்கள் கைவரிசை

சரித்திர பிரசித்திபெற்ற பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் 14.10.2013 திங்கட்கிழமை இரவு திருடர்கள் ஆலய பின்பகுதி ஓட்டினை பிரித்து உள்ளே நுளைந்து ஆலயப்பிரதான கதவினை உடைத்துள்ளார்கள். பின்னர் களஞ்சிய அறைக்கதவினயும் உடைத்து உள்ளே வைக்கப்பட்டிருந்த ஆலய கதவுகளின் திறப்புக்கள் அனைத்தையும் திருடர்கள் எடுத்துச்சென்றுள்ளார்கள்.

 ஆலயத்தில் அடியவர்களின் காணிக்கை உண்டியல் உடைக்கப்பட்டுள்ளது ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவ்வுண்டியலில் உள்ள காணிக்கைகளை ஆலய சபையினர் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றும் எந்தவொரு பொருட்களும் திருடர்களால் களவாடப்படவில்லை என்று ஆலய பரம்பரைத்தலைவர் திரு சிதம்பரப்பிள்ளை இராஜறஞ்சன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்தவருடம் 2012 வருடாந்த உற்சவம் மறுதினங்களில் இத்தகைய திருட்டுச்சம்பவம் இடம்பெற்றது அதேபோன்று இந்தவருடமும் அத்தகையதொரு திருட்டுச்சம்பவம் நடைபெற்றுள்ளது ஆனால் எம்பெருமானின் திருவுருவச்சிலைமீது அவர்கள் தங்கள் கைவரிசையைக்காட்டவில்லை.

 

 

15.10.2013 செவ்வாய்க்கிழமை இன்று பிரதான குருக்கள்மார்களை அழைத்துவந்து பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்று நாகேஸ்வரப்பெருமானுக்கு விசேடபூஜைகள் நடார்த்தி வளமைபோன்று நித்திய பூஜைக்கான வளிமுறைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதனை அடியவர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றனர்.