அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அடியவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை கூறுகின்றனர். ஆலய நிர்வாகம்.

நாகர்கோவில் வடக்கு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மகா கும்பாபிஷேக உற்சவமானது மிகச்சிறப்பான முறையில் இடம்பெற்று நிறைவடைந்துள்ள இவ்வேளையில் , இந்நிகழ்வுகள் அனைத்தும் நன்முறையில் நிறைவுபெற நல்லாசிகளை அருளிய இறைவனுக்கு முதற்கண் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அத்துடன் எமது ஆலய கட்டிட நிர்மான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக உற்சவத்தை நிறைவு செய்துள்ள இவ்வேளை வரையிலான காலகட்டங்கள் அனைத்திலும் ஆக்கபூர்வமான தமது நல்ல சிந்தனைகளை எம்மோடு பகிர்ந்துகொண்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருத்தமான ஆலோசனைகளை வழங்கி எம்மை வழிநடத்திய அனைவருக்கும் மற்றும் எம்மோடு இணைந்திருந்து பல்வேறு வகைகளில்  தமது உயரிய பங்களிப்புக்களை வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இவ்வேளையில் நன்றிகளை தெரிவிப்பதில் ஆலய நிர்வாகம் பெருமையடைகிறது.

அதுபோலவே இன்று கம்பீரமாக எழுந்தருளி வீற்றிருக்கின்ற எம்பெருமானது ஆலய நிர்மாணிப்பு பணிகளுக்காக நாம்  நிதி வேண்டி நின்ற வேளைகளிலெல்லாம் முகச்சுழிப்புகளின்றி தம்மால் இயன்ற பங்களிப்பை இன்முகத்தோடு வழங்கிய புலத்திலும் புலம்பெயர்தேசங்களிலும் வாழும் எம்பெருமானது அடியவர்களையும்  பொது மக்களையும் மனதார வாழ்த்தி நன்றிகளை தெரிவிப்பதோடு தமது அன்றாட வேலைச்சிக்கல்களுக்கு மத்தியில் நிதிச்சேகரிப்புகளுக்காக காலநேரமின்றி பாடுபட்ட மக்களையும் வாழ்த்தி நன்றி பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்.

அத்துடன் குறிப்பிட்ட காலத்தினுள் கட்டிட நிர்மான பணிகளை நிறைவுசெய்து மகா கும்பாபிஷேகம் நிறைவுபெற அயராத உழைப்பினை வழங்கி இரவுபகல் பாராது பாடுபட்டு மனநிறைவு தரும்வகையிலான தோற்றத்தில் ஆலய விதிமுறைகளுக்கு அமைவாக அழகுற ஆலயத்தை வடிவமைத்து தருவதில் தமது தன்னலமற்ற பங்களிப்புக்களை வழங்கிய கட்டிட நிர்மாண துறை சார்ந்தவர்கள் , கலை நயம் மிக்க தெய்வாம்சமான படைப்புக்களை வடிவமைக்க பாடுபட்ட பணியாளர்கள் , அவர்களை வழிநடத்திய சிற்பாற்சாரிகள் , மற்றும் ஆலய வடிவமைபில் ஈடுபட்ட அனைத்து சிரஞ்சீவிகளுக்கும் எம்பெருமானது நல்லாசிகளோடு  எமது நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவைமட்டுமன்றி ஆலய வளர்ச்சியின் மீது அக்கறையோடு இன்று வரை எம்மோடு இணைந்திருக்கும் அற்புதமான நல்ல மனிதர்களுக்கும் , எம்பெருமான் ஆலயத்தை மேலும் மெருகூட்டும் வகையில் சிரமதான பணிகளில் எம்மோடு கரம்கோர்த்து பணி செய்த மக்கள் தொண்டர்களுக்கும் , மகா கும்பாபிஷேகம் தொடங்கி சங்காபிஷேகம் மற்றும் மண்டலாபிஷேக பூஜைகள் என அனைத்து நிகழ்வுகளுக்கும் பங்களிப்பு நல்கிய உபயதாரர்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகம் இவ்வேளையில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.

 

இவற்றோடு ஆலய நிகழ்வுகள் அனைத்தையும் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க உதவியாக சிறப்பான முறையில் படப்பிடிப்புகளில் ஈடுபட்ட   நிறுவனத்தினருக்கும் , ஒலி ஒளி அமைப்புக்களை திறம்பட வழங்கிய  ஸ்தாபணத்தை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் , ஆலய அறிவித்தல்கள் , புகைப்படங்கள் என அனைத்தையும் செய்திகளாக மக்களுக்கு உடனுக்குடன் கொண்டு சேர்த்த இணையதள ஊடகங்களுக்கும் மற்றும் இதர அமைப்புகளுக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம் . இறுதியாக ஆலய வளர்ச்சிக்காக அயராது பாடுபடும் நிர்வாக சபை உறுப்பினர்கள் , பொது மக்கள் , இறையடியவர்கள் என அனைவரையும் வாழ்த்தி புலவியோடை எம்பெருமானது ஆசியும் அருளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுவதோடு மீண்டும் ஒருமுறை எமது மனம் நெகிழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
                                                                                      நன்றி.
 
குறிப்பு :- இதுவரையில் நடைபெற்ற திருப்பணி வேலைகளின் வரவு செலவு கட்டம் கட்டமாக வெளியிட்டிருந்தோம். எனினும். தற்போது நடைபெற்று முடிந்த திருப்பணிவேலைகள், கும்பாபிஷேகம், மண்டலாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகியவற்றிற்கான வரவு, செலவு விபரங்கள் உரிய முறையில் தயார் செய்து அடியவர்களுக்கு மிகவிரைவில் வெளியிடவுள்ளனர் ஆலய நிர்வாகத்தினர். 
  

 

Last Updated (Saturday, 29 August 2015 02:07)