அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மணவாளக்கோலம் 02.07.2020

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வருடாந்த மணவாளக்கோலம் எதிர்வரும் 02.07.2020 வியாழக்கிழமை அன்று நடைபெறவுள்ளதனால் அடியவர்களாகிய தங்களது நிதிப்பங்களிப்பினை வழங்குமாறு அன்பாக வேண்டுகின்றோம்.

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலமை காரணத்தினால் இவ்வாண்டு இரவு நிகழ்வுகளை இடைநிறுத்தி, அடியவர்களின் நெருக்கடியை கட்டுப்படுத்தும் முகமாக பூஜையினை நடார்த்த நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர்.

காலை 9 மணியளவில் 1008 சங்காபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி நண்பகல் 12 மணியளவில் மங்களவாத்தியம் முழங்க விஷேடபூஜை நடைபெற்று சுமார் பி.ப 2 மணியளவில் பகல் பூஜைகள் நிறைவுறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து ,மாலை 5 மணிக்கு அலங்கார பூஜையுடன் எம்பெருமான் எழுந்து உள்பவீதியுலாவுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பறத்தில் வெளிவீதியுலா வலம்வந்து அடியவர்கள்களுக்கு அருள்பானலித்தருள்வார்,

தகவல் :- நிர்வாகம்

அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயம்