அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் திருவாதிரை பூஜை சிறாப்பாக நடைபெற்றது.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் 11.01.2017 புதன்கிழமை திருவாதிரை பூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்திற்கு அழகிய இடபவாகனம் ஒன்றினை கணபதிப்பிள்ளை தங்கமுத்து ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கியதற்கமைவாக இந்தவருடம் எம்பெருமான் அழகிய இடபவாகனத்தில் வெளிவீதியுலா வந்தகாட்சி அடியவர்களுக்கு மிகவும் பரவசமாமூட்டியது.

 

 

 

 

இவ் இடபவாகனத்தினை அன்பளிப்பு செய்த குடும்பத்தினருக்கு நிர்வாகத்தினர் மிகுந்த நன்றியினை கூறி எம்பெருமானின் பேரருள் கிடைக்கவேண்டும் என்றும். அழகிய இடபவாகனத்தினை செதுக்கிய உரிமையாளருக்கும் பாரட்டு தெரிவித்தன் பொருட்டு அவ்வுரிமையாள தாமாக முன்வந்து எமது ஆலயத்திற்கு ஊஞ்சல் பீடம் ஒன்றினையும் அன்பளிப்புசெய்வதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.