அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய மணவாளக்கோல விழா இரவு நிகழ்ச்சிகள்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் 18.06.2016 சனிக்கிழமை நடைபெறவிருக்கும் மணவாளக்கோல விழாவினை சிறப்பிக்கும் இரவு நிகழ்ச்சிகள்.

மாலை 7:30 மணிக்கு
பருத்திநகர், சதீஸ்குமார் குழுவினருடன், யாழ்ப்பாணம் கண்ணன் குழுவினரும் இணைந்து நாதஸ்வரக்கச்சேரி நடைபெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து, கலாபூசணம் க.ப.பரராசசிங்கம் நடுவராக பொறுப்பேறு "இன்றைய இளையதலைமுறை திசைமாறி செல்வதற்கு பெரிதும் காரணம் குடும்பசூழலே.....சமூகசூழலே....." என்கின்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறாவுள்ளது.

குடும்பசூழலே என வாதாடுபவர்கள்.
வேல் நந்தகுமார்
ச.அன்ரனி
த.வாணிமுகுந்தன் ஆகியோர்கள்

சமூக சூழலே என வாதாடுபவர்கள்.
கோ.கோகிலரதன்
க.கஜந்தன்
தி.கார்த்திகேயன் ஆகியோர்கள்.

அதனைத்தொடர்ந்து வில்லிசை மன்னன் சின்னமணியின் சிசியர்களான கலைவாணி வில்லிசை குழுவினரின் சிலம்பு சிரித்தது என்னும் வில்லிசை நடைபெறும்.

அதிகாலை 4:30 மணிக்கு விசேட பூஜையுடன் எம்பெருமான் அலங்கரிக்கப்பட்ட முத்துச்சப்பறத்தில் வீதியுலா வலம்வரும் என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

Last Updated (Thursday, 16 June 2016 05:09)