அறிவிப்பு
நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 10.10.2016 இன்று ஆரம்பமாகியது.![]() நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 10.10.2016 திங்கட்கிழமை இன்று காலை வழமைபோன்று அனைத்து கிரியைகளுடன் அபிஷேகம் ஆரம்பமாகி நண்பகல் விஷேட பூஜைகள் இடம்பெற்று எம்பெருமான் உள்வீதியுலா வாலம் வந்து அடியார் பெருமக்களுக்கு அருள்பாலித்தருளினார். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது Last Updated (Monday, 10 October 2016 17:39) |
நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் நடைபெற்ற உலக ஆசிரியர் தினவிழா.![]() நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் கடந்த 06.10.2016 வியாழக்கிழமை அன்று உலக ஆசிரியர் தின விழாவினை மாணவர்களுடன் பெற்றோர்களும், நலன் விரும்பிகளும் இணைந்து ஆசிரியர்களை கெளரவித்து நினைவில் பரிசில்களும் வழங்கி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது புகைப்பட உதவி:- வதனராஜா லோகராஜா Last Updated (Monday, 10 October 2016 17:27) நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய 10ம் திருவிழா உபயகாரர்களுக்கான அறிவித்தல்.![]() எதிர்வரும் 19.10.2016 புதன்கிழமை அன்று நடைபெறவிருக்கும் 10ம் திருவிழா (சமுத்திர தீர்த்த உற்சவம்) வெகு விமர்சயாக நடாத்தப்பட வேண்டுமென 23.09.2016 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைவாக உள்ளூரில் உள்ள 10ம் திருவிழா உபயகாரர்களுக்கு அறியத்தருவதோடு புலம்பெயர்ந்த நாட்டில் உள்ள 10ம் திருவிழா உபயகார்களுக்கும் இணையத்தள மூலம் Last Updated (Wednesday, 05 October 2016 17:20)
|
ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் மகாகும்பாபிஷேகப் பெருவிழா மிகவும் சிறப்பான முறையில் நிறைவுற்றது.![]() நாகர்கோவில் வடக்கு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் கடந்த 22.08.2016 திங்கட்கிழமை பக்தர்கள் புடைசூழ குருமார்களின் வேதாகமங்கள் உரைக்க, வலம்புரி விநாகனின் வாசல் வந்து சேருமுன்னே நலம்பல கண்டோமையா என மங்கள வாத்தியம் ஒலிக்க எம்பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகப் பெருவிழா மிக மிக சிறப்பாக நடைபெற்றது புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மணவாளக்கோல திருவிழா மாபெரும் விழாவாக நடைபெறவுள்ளது.![]() அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 28.08.2016 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மணவாளக்கோல விழாவை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் வந்து சிறப்பிக்கும் மாபெரும் இசைநிகழ்சி ஏற்பாடு செய்துள்ளமை யாவரும் அறிந்த விடயம். Last Updated (Thursday, 25 August 2016 18:29)
|
- ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் மண்டலாபிஷேக பூஜைகளில் பங்கு கொள்ளும் அடியவர்களின் பெயர் விபரங்கள்.
- ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி பெருவிழா
- வலம்புரி நாயகனான ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய குடமுழுக்கு பெருவிழா 22.08.2016 அன்று கோலாகலமாக நடைபெறவுள்ளது.
- முருகையா தேவஸ்தான திருவிழாவினை முன்னிட்டு S.P.B சரண் தலமையில் மாபெரும் சிறப்பு இசை நிகழ்ச்சி