Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home Village Info

அறிவிப்பு

வருடாந்த ஒன்று கூடலுக்கான அழைப்பிதழ்

சுவீஸ் வாழ் நாகர்கோவில் மக்கள் நண்பர்களுடன் இணைந்து நடாத்தும் வருடாந்த ஒன்றுகூடலும் கலை நிகழ்வும். எதிர்வரும் 12.11.2016 சனிக்கிழமை அன்று மதியம் 11.30 மணியளவில் சூரிச் மாநகரில் நடைபெறவுள்ளது.

Last Updated (Sunday, 23 October 2016 08:09)

மேலும்

 

பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் தீர்த்த உற்சவத்தின் போது காட்சி கொடுத்து அருள்வழங்கிய நாகேஸ்வரப்பெருமான்.

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தில் 10ம் நாள் சமுத்திரதீர்த்த உற்சவத்தினை நாகர்கோவில் வடக்கு மக்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடினார்கள். நாகேஸ்வரப்பெருமான் நாகர்கோவில் வடக்கு மக்களின் பக்தியினை ஏற்றுக்கொண்ட வகையில் காட்சி கொடுத்து அருள்பாலித்தார். அதிசயம் என்னவென்றால் நள்ளிரவு சுமார் 10 மணியளவில் ஆலய முன் வீதியில் விஷாலமாக நிற்கும் மருதமரத்தின் அதிஉச்சக்கிளையில் நாகேஸ்வரப்பெருமான் இருப்பதனை அந்தவேளையில் முதலில் கண்டது யார்??? உச்சிக்கிளையில் நாகேஸ்வரப்பெருமான் பார்வையிட கிளிக் பண்ணவும். Video 1, Video 2Video 3

Last Updated (Friday, 21 October 2016 08:40)

மேலும்>>

 

பூர்வீக நாகதம்பிரான் ஆலய 10ம் நாள் தீர்த்தோற்சவம் நேரடி ஒளிபரப்பு.

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று நடைபெறவிருக்கும் 10ம் திருவிழா தீர்த்த உற்சவம் புலம்பெயர் அடியார் பெருமக்களுக்காக நேரடி ஒலிப்பரப்பினை மேற்கொண்டுள்ளார்கள் ஆலய விழாக்குழுவினர். அதற்கமைவாக நாகேஸ்வரா படப்பிடிப்பினரும் நாகர்மணல் இணையத்தினரும் இவ் நேரடி ஒலிபரப்பினை மேற்கொண்டுள்ளார்கள். இங்கே கிளிக் பண்ணவும்.

Last Updated (Wednesday, 19 October 2016 04:45)

 

நாகர்கோவில் வடக்கு மாணிக்கப்பிள்ளையார் சங்காபிஷேக பெருவிழா.

நாகார்கோவில் வடக்கில் அமைந்துள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் 06.10.2016 வியாழக்கிழமை அன்று 1008  சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.  காலை 9 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகி மதியம் 11 மணியளவில் சங்காபிஷேகம் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்றது.  மாலை 7 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று எம்பெருமான் வீதியுலா வலம்வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தருளினார். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

Last Updated (Saturday, 15 October 2016 09:04)

 

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய 5ம் நாள் திருவிழா...

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 10.10.2016 திங்கட்கிழமை ஆரம்பமாகி 14.10.2016 வெள்ளிக்கிழமை அன்று 5ம் திருவிழா சிறப்பான முறையில் நடைபெற்றது. 15.10.2016 சனிக்கிழமை 6ம் திருவிழா பாம்புத்திருவிழா 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை 7ம் நாள் கப்பல் திருவிழா, 17.10.2016 8ம் நாள் வேட்டைத்திருவிழா, 18.10.2016 சப்பறத்திருவிழா, 19.10.2016 10ம் நாள் சமுத்திர தீர்த்த உற்சவங்கள் வெகு விமர்சயாக நடைபெறவுள்ளது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
 
More Articles...
MiniCalendar
April 2021
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery