Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home Village Info

அறிவிப்பு

முருகையா தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விரதம் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கந்தசஷ்டி விரதம் அடியார் பெருமக்களால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. காலை 11 மணியளவில் விசேட அபிஷேகம் நடைபெற்று நண்பகல் 12 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி சூரன் வதைப்படலம்...புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

Last Updated (Thursday, 03 November 2016 15:59)

மேலும்

 

நாகர்கோவில் கிழக்கு பூசையம்மன் ஆலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா

நாகர்கோவில் கிழக்கு வேலுப்பிள்ளை முத்தையா அவர்களினால் பராமரிக்கப்பட்டு வருகின்ற பூசையம்மன் ஆலயம் யுத்தத்தினால் முற்றாக சேதமடைந்த நிலையில் உள்ளது தற்போது அதனை புதிதாக அமைப்பதற்கு 02.11.2016 புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எனவே அடியார் பெருமக்களே தங்களால் இயன்ற சிறுதொகை பண உதவிகளை வழங்குமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றனர். பணம் அனுப்பும் விபரங்கள் பின்னர் இணைக்கப்படும். புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
 

அருள்மிகு முருகையாதேவஸ்தான சுற்றுக்கொட்டகை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் சுற்றுக்கொட்டகை அமைப்பதற்காக 02.11.2016 புதன்கிழமை அன்று காலை 11.00 மணியளவில் உயர்திரு ஆறுமுகம் சுந்தரலிங்கம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.  அதனைத்தொடர்ந்து அடியார் பெருமக்களாலும் இவ்வடிக்கல் நாட்டப்பட்டது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
 

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய 10ம் திருவிழாவின் வரவு செலவு நிதி நிலமை பற்றிய விபரம்.

நடைபெற்று முடிந்த நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய சமுத்திரதீர்த்த உற்சவ விழாவிற்கு இவ்வாண்டு புலம்பெயர் அடியவர்களிடம் இருந்து போதுமான நிதி கிடைக்கப்பெறாமையினால் வரவினை விட செலவு அதிகமாகியது என்பதனை புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

மேலும்

 

அனைத்து மக்களும் அறிந்துகொள்ளவேண்டிய பல பல உண்மைசம்பவங்கள் விரைவில்......

அனைத்து மக்களும் அறிந்துகொள்ளாத பல பல உணமைச்சமபவங்கள் மக்கள் பார்வைக்கு வெகுவிரைவில் வெளியிடவுள்ளார்...... நாகர்கோவில் பா.அருணகிரி....நிச்சயமாக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விடயம் படிக்கத்தவறாதீர்கள்!!!!!!!!!!!!!!!!

Last Updated (Wednesday, 26 October 2016 16:17)

 
More Articles...
MiniCalendar
April 2021
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery