Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home Village Info

அறிவிப்பு

நாகேஸ்வரா வி. கழக விசேடபொதுக்கூட்டம் (லண்டன்)

நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக விசேடபொதுக்கூட்டம்.  (லண்டன்)

 

புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகத்தின் அங்கத்தவர்களை ஒன்றுதிரட்டும் முகமாகவும், தற்பொழுது மீள்குடியேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாகேஸ்வரா கழகத்தை மேம்படுத்தும் முகமாகவும் விசேட பொதுக்கூட்டம் கூடுவதற்காக லண்டன் வாழ் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள் தீர்மானித்ததன் பயனாக.

எதிர்வரும் 04.09.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் லண்டன் மாநகரில் "முகவரி"  122 Farnan Avenue, Walthamstow, Lomdon, E17 4NH.   விசேட பொதுக்கூட்டம் கூடவிருப்பதால் லண்டன் வாழ் அனைத்து நாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், மற்றும் உறுப்பினர்களாக விரும்பும் விளையாட்டு வீரர்கள், முக்கியமாக ஆதரவாளர்கள், ஆலோசகர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றி

 

தகவல்:-  மயில்வாகனம் சிவகரன்  (லண்டன்)

Phon:- 00447897224835

            சிறீஸ்கந்தராஜா இரத்தினவேல்

Phon:-    00447466376256

இலங்கையில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக நிர்வாகத்தினர்களான.

                    க.இராசலிங்கம்  -தலைவர்

                    பா.அருணகிரி   - செயலாளர்

                    சி.சிவாயநம       - உ.ப.தலைவர்   Phon-  0094 776685054

Last Updated (Saturday, 03 September 2011 06:03)

 

29.07.2011 இன்று நாகர்கோவில் மகாவித்தியாலய தற்காலிக கூடம் பளையமாணவர்களால் வேயப்பட்டது.

யாழ் நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிக கொட்டகை மேற்கூரை வேயப்படமால் இருந்ததும் அதற்காக ஒதுக்கப்பாட்ட பணத்தினை முழுமையாக செலவுசெய்யாமல் குறுகிய செலவில் கொட்டகையினை வேய்ந்து மீதிப்பணத்தினை இப்பாடசாலைக்கு வேறுதேவைக்காக பயன்படுத்தவேண்டும் என எண்ணி நாகர்கோவில் மகாவித்தியாலய பழைய மாணவர்களால் இப்பணி மிகக்குறுகிய செலவில் செய்யப்பட்டது.

இதனால் நாம் உணர்வது என்னவெனில் எமதுபாடசாலையில் பழையமாணவர்களும் மக்களும் எவ்வளவு அக்கறையும் பற்றும் கொண்டுள்ளார்கள் என்பதை எம்மால் உணரமுடின்றன.

இப்பணியில் வயது முதிர்ந்தவர்களும் கலந்துகொண்டுள்ளதை புகைப்படம் இணைக்கப்பட்ட பின்னர் காணலாம்.

Last Updated (Friday, 29 July 2011 17:23)

 

நாகர்கோவிலில் மீள்குடியேறிய மக்களுக்கு தகரம் வழங்கல்.

நாகர்கோவிலில் மீள்குடியேறிய மக்களுக்கு தகரம் 26.07.2011 இன்று உதவி வழங்கும் நிறுவனங்களினால் அங்கு குடியேறிய சுமார் 30 குடும்பங்களிற்கு தற்காலிக வீட்டுத்திட்டத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக தகரம் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏனைய உதவிகள் கிடைக்கும் என நம்ம்புகின்றனர். மீள்குடியேற விரும்புபவர்கள் உங்களது குடும்ப அட்டையினை தற்காலிக பிரிவில் இருந்து நிரந்தர பிரிவிற்கு அதாவது நாகர்கோவில் மேற்கு J/424 பிரிவிற்கு மாற்றம் செய்துகொண்டதன் பின்னர் தங்களை நாகர்கோவில் மேற்கு  நிரந்தர வசிப்பிடமாக ஏற்றுக்கொள்ளப்பப்டுவார் என அறிவித்தல் விடப்பட்டுள்ளது.
 

நாகர்கோவில் கிராமத்தில் மீளக்குடியமர்ந்த மக்கள் படும் அவலம் ( படங்கள் இணைப்பு).

நாகர்கோவில் கிராமத்தில் மீளக்குடியமர்ந்தவர்கள் சொந்தமண்ணில் மீளக்குடியமர்ந்த சந்தோஷத்திற்காக பெரும் கஷ்டத்தின் மத்தியில் வாழ்வதை இணைக்கப்பட்ட படத்தில் காணலாம். படங்கள் இணைப்பு )

Last Updated (Saturday, 23 July 2011 21:52)

Read more...

 

மீளக்குடியமர்ந்த எமதுகிராமமக்கள்

எம்மக்களின் கனவு நிறைவேறுகின்றன.....

21.07.2011 அன்று எமதுகிராமத்தில் மீள்குடியேற்றம் இடம்பெற்றதைத்தொடர்ந்து நாகர்கோவில் வடக்கில் மேற்கு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட குடும்பங்களில் சுமார் 10 குடும்பங்கள் அங்கு குடியமர்ந்து மிகுந்தசந்தோசத்துடன் வாழ்கின்றார்கள். அவ்வாறான குடும்பங்களில் முடியப்பு ஜோசெப்ஜோன்சன், ஜோசெப்ஜோன்சன தவக்குமார், கணேசலிங்கம் இந்துமதி, கணேசலிங்கம் தினேஸ், தாமோதரம்பிள்ளை சின்னவன், கணபதிப்பிள்ளை இராசலிங்கம் மற்றும் அவரது பிள்ளைகள் குடும்பம் இன்னும் சிலகுடும்பங்கள் பதினொரு ஆண்டுகால இடைவெளிகளின் பின் நாகர்கோவில் கிராமம் இனப்பிரச்சினைகள் முடிவடைந்தபின்னர் மீளக்குடியமர்ந்துள்ளார்கள்.

உலகமெங்கும் எம்மண்ணின் உண்மைகளை அறிந்துகொள்வதற்காக காத்துநிற்கும் நாகர்மணல்.கொம் நேயர்களிற்காக நாளையதினம் முழுமையாக செயல்பட்டு தங்களுக்காக. எமதுகிராமத்தில் குடியமர்ந்தவர்களை புகைப்படம்மூலம் அவர்களின் இருப்பிடம் வாழ்க்கை அனைத்தினயும் நீங்கள் எமது இணையத்தளத்தில் பார்வையிடமுடியும்.

 
More Articles...
MiniCalendar
February 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
242526272829 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery