Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home Village Info

அறிவிப்பு

பன்னிரண்டு ஆண்டுகளின் பின்னர் நாள்வலை

நாகர்கோவில் வடக்கு மக்கள் கடந்த பன்னிரண்டு ஆண்டுகாலமாக தடைப்பட்டிருந்த நாள்வலை கொண்டாட்டம் இந்தவருடம் வெகுசிறப்பாக கொண்டாடினார்கள். அதன் புகைப்படம் பின்னர் இணைக்கப்படும்.வழமைபோன்று இந்தவருடமும் நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து எல்லாத்தெய்வங்களையும் தொழுதுகொண்டு பின்னர் எல்லோரும் ஒன்றுசேர்ந்து சமுத்திரத்தில் தமது பாரம்பரிய மீடன்பிடித்தொழிலில் ஈடுபட்டனர்.அதன்பினர் அனைத்து செயற்பாடுகளும் பளைய நினைவுகளை ஞாபகப்படுத்தியது. அனைத்து தொழிலாளர்களும் பனங்கிளங்கு, கொழுக்கட்டை, புடிப்புட்டு போன்ற பலவகை உணவுகள் கொண்டுவர அதனை எல்லோரும் மாற்றி மாற்றி பறித்து உண்டு பேரானந்தம் அடைந்தார்கள். மீதியை படங்களில் காணலாம்.
 

நாகர்கோவில் புனிதசவேரியார் ஆலய பூஜை 16.12.2011 இன்று ஆரம்பம்.

பன்னிரண்டு வருடங்களுக்குப்பின்னர் நாகர்கோவில் புனிதசவேரியார் ஆலயம் 16.12.2011 இன்று மக்களால் ஆண்டவனுக்கு பூஜை ஆரம்பிக்கின்றார்கள். அல்லல்படும் எம்கிராம மக்களை காப்பாற்ற சிலுவையில் அறைந்த எம் யேசுபிரான் பாதங்களை வணங்கி மண்டியிட்டு எம் துன்பங்களையெல்லாம் யேசுபிரானிடம் முறையிட்டு எம்மை பாதுகாப்பது உன்கடன் என்று புனிதசவேரியாரிடம் மீண்டும் சரணடையும் புனித நாள் இதுவேயாகும்.

இன்று பி.பகல் 05.00 மணியளவில் பங்குத்தந்தை ஜீவன் அடிகளால் பூஜை ஆரம்பமாகும் என்பதனையும் இனிவரும் நாட்களில் வழமைபோல் புனிதசவேரியார் ஆலயத்தில் பூஜைகள் நடைபெறும் அத்துடன் கிறிஸ்மஸ் பூஜை மற்றும் புதுவருட பூஜைகளும் வழமைக்கு மாறுபடாமல் நடைபெறும் என்பதனையும் நாகர்கோவில் வாழ் புனிதசவேரியார் மக்களுக்கு அறியத்தந்துள்ளோம்.

Last Updated (Friday, 16 December 2011 01:33)

 

நாகர்கோவில் கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயபுனரமைப்பு.

 

நாகர்கோவில் கெளத்தந்துறை பிள்ளையார்கோவில் புனரமைப்பு.

 

கடந்த பத்துவருடகாலமாக பூட்டியிருந்த நாகர்கோவில் கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயம் புனரமைப்புச்செய்வதற்கான காலம் கூடிவந்துள்ளது. அதன் முதற்கட்ட பயனாக கடந்த புரட்டாதிமாதம் பாலஸ்தாபன விஞ்ஞாபனம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து நித்திய பூஜைகள் எம்பெருமானுக்கு நடைபெற்றுகொண்டிருந்த வேளையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை 11.12.2011 அன்று பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் நாகர்கோவில் கெளத்துந்துறை பிள்ளையார் ஆலயத்தை சிறந்தமுறையில் புனரமைப்புசெய்வதற்காக ஒரு சிறந்த நிர்வாகம் ஒன்று தெரிவுசெய்வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பிரகாரம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட எமதுகிராம மக்கள் புதியதொரு நிர்வாகத்தை தெரிவுசெய்தார்கள். அவ் உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் வருமாறு.

தலைவர்:- தியாகராசா நாகமுத்து    (0094 775834192)

உ.தலைவர்:- நடராசா செல்வராசா

செயலாளர்:- சபாரத்தினம் உதயகுமார்  (0094776607338)

பொருளாள்ர்:- கணபதிப்பிள்ளை இராசலிங்கம்  (0094774477489)

 

நிர்வாக உறுப்பினர்கள்

1) இராசையா பத்மநாதன்  (0094778269785)

2) தவராசா வதனராசா  (0094776343649)

3) தனபாலசிங்கம் பரமானந்தராசா  (0094776213255)

4) கந்தையா சிறீகுமார்

5) சிவசாமி மதியழகன் (0094779522472)

6) இராசேந்திரம் சுரேஸ்குமார்

7) பாலசுப்ரமணியம் அருணகிரி  (0094776178870)

 கெளத்தந்துறை பிள்ளையார் அருளால் நல்லதொரு நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இப்பொதுக்கூட்டத்தில் எடுத்துக்கொண்டவிடயங்களில் ஒன்று அடியார்களின் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால்?

இந்தவருடம் ஆரம்பமாகும் பிள்ளையார்கதை பூஜை, திருவெம்பா பூஜை, மாதாந்த சதுர்த்தி பூஜைகளை பொறுப்பேற்ற அடியவர்கள் நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு தங்களுடைய பணிகளைமேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.

அந்தவகையில் பிள்ளையார்கதை உபயகாரர்கள்

பொன்னுச்சாமி மீனாட்சி

கிட்டிணபிள்ளை சிவசாமி

தியாகராசா தனபாலசிங்கம்

ஏரம்பு கணேசபிள்ளை

பொன்னையா வனிதாமணி

பாலசுப்பிரமணியம் சரஸ்வதி

தங்கமயில் சரசு

குணம்

சின்னத்துரை

யோகநாதன்

சுப்பையா திருச்செல்வம்

சுந்தரம்,கந்தசாமி

தளையசிங்கம்

பொன்னையா பழனியாண்டி

நடராசா செல்வராசா

ஜெயக்குமார் மலர்

தர்மராசா

சபாராத்தினம் தங்கம்மா

ஏரம்பு சின்னமணி

தியாகராசா நாகமுத்து

சிவசாமி மனோகரதாஸ்

ஆகியவர்கள் பிள்ளையார்கதை 21 உபயத்தினை கடந்தகாலங்களாக மேற்கொண்டுவருவதேயாகும் ஆனால் தற்போது இப்பூஜை உபயகாரர்கள் பல்வேறுபட்ட பிரதேசங்களில் வாழ்ந்துவருவதனால் உங்கள் உறவினர்கள் ஊடாகவோ அல்லது நீங்களே நேரில்வந்தோ எம்பெருமானது பூஜைகளை மிகவும்சிறப்புடன் மேற்கொண்டு பிள்ளையாரின் அருளைபெற்றுய்வீர்களாக.

குறிப்பு:- உங்களது உபயங்களை நீங்கள் தவறவிடும் சந்தர்பத்தில் இந்தவருடம் அதாவது 2011ம் ஆண்டும் 2012ம் ஆண்டும் நிர்வாகம் பொறுப்பேற்கும் 2013ம் ஆண்டு தவறவிடப்பட்ட உபயங்கள் வேறு அடியவர்களுக்கு வழங்கப்படும். இவ் முடிவானது பல அடியவர்களின் வேண்டுதலிற்காக நிர்வகத்தினால் எடுக்கப்பட்டது.

                                                                              நன்றி.

எமது அன்பார்ந்த வாடிக்கையாளர்களே இந்த்தத்தகவலினை எமதுகிராமமக்களாகிய மற்றவர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள் ஆலயநிர்வாகத்தினர்.

Last Updated (Wednesday, 14 December 2011 03:12)

 

15.10.2011 அன்று நடைபெற்ற தீர்த்தோற்சவ விழா புகைப்படம்

 புகைப்படத்தொகுப்பு

               கர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் 15.10.2011 சனிக்கிழமை இன்று மிகவும் சிறப்பானமுறையில் திருவிழா கொண்டாடப்பட்டது.

           சென்றவருடம்போல் இந்தவருடமும் ஆடம்பரமாக செய்யமுடியாமல் போனாலும் வழமைபோல் இந்தவருடமும் பக்தகோடிகள் திரள்திரளாக வந்து எம்பெருமானின் திருவிழாக்கோலத்தை கண்டுகளித்தனர். இந்த வருடம் கொண்டாடப்பட்ட திருவிழாக்களில்  சென்ற ஒன்பது திருவிழாவிற்கு ஆலயத்திற்கு வந்த பக்த்தர்கள் மிகமிக குறைவாக காணப்பட்டதனால் பத்தாம் திருவிழாவான இன்று தீர்த்தோற்சவத்திருவிழாவிற்கும் பக்தர்கள் சாதாரணமாகத்தான் வருவார்கள் என எண்ணி சுமார் 200 கிலோ அரிசி அன்னதானத்தை தயார் செய்தார்கள். ஆனால் எதிர்பாரத அளவிற்கு மேலாக பக்த்தகோடிகள் திரள்திரளாக பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்திற்கு வந்தமையினால் பக்த்தர்களின் தொகையினை கருத்தில்கொண்டு மேலதிகமாக கொண்டுவந்த அன்னதான பொருட்களை தொண்டர்கள் சமைத்து எம்பெருமானை தரிசிக்க வந்த அடியார்கள் பசியாறி எம்பெருமானின் ஆலயத்தைவிட்டு அவர்களது இல்லம்செல்லும்போதும் வீட்டில் உள்ளவர்களுக்கும் எம்பெருமானின் அருள்கிடைக்கவேண்டி அன்னதான பிரசாதத்தையும் கொண்டுசென்றார்கள்.

இதைவிட ஆலயத்திற்கு கச்சான் கடைகள், ஐஸ்கிறீம்கடை, பூந்திவகைகள், மற்றும் அழகுப்பொருட்கள் (மணிக்கடைகள்) என ஆலயத்திருவிழாவை அலங்கரிக்கும் வகையில் அனைத்துக் கடைகளும் அமைக்கப்பட்டு இத்திருவிழாவை சிறப்பித்தார்கள். அதைவிட ஆலயத்தில் பக்த்தகூட்டம் அதிகமானதினால் அவசர சிக்கிச்சைக்காக  வைத்தியர்களால் அம்புலன்ஸ் ஒன்று ஆலயத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டது.

2011 ம் ஆண்டு தீர்த்தோற்சவ விழாவை வர்ணிப்பதினைவிட.  புலம்பெயர்ந்த நாட்டில் வாழும் நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் மெய்யடியார்களே இன்று நடைபெற்ற இந்தவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காணலாம்.

Last Updated (Friday, 21 October 2011 00:08)

 

பூர்வீக நாகதம்பிரான் ஆலயவருடாந்த தீர்த்தோற்சவம் 2011

பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் இந்தவருடம் மிகமிக எழிமையான முறையில் கொண்டாடப்படுகின்றது. எம்பெருமானுக்கு பால் இளநீர் அபிஷேகத்துடன் மட்டும் பூஜைகள் நிறைவடைகின்றது. இருந்தும் பத்தாந்திருவிழாவான தீத்தோற்சவம் 15.10.2011 சனிக்கிழமை நடைபெறுகின்றது நாகர்கோவில் வடக்குவாழ் மக்களாகியவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து அவரவர் உரிமைகளை ஒன்றுதிரட்டி(வீகிதாசாரப்பணம்)  இந்த ஒன்பது திருவிழாவைவிட தீர்த்தோற்சவம் பலமடங்கு வித்தியாசமான முறையில் கொண்டாடுவது எல்லோருக்கும் தெரிந்தவிடயம். ஆகவே இந்த ஆண்டும் மிகமிக எழிமையான முறையில் எம்பெருமானின் திருவிழா கொண்டாடடப்பட்டாலும் வடக்குமக்கள் சற்று வித்தியாசமானமுறையில் கொண்டாடவுள்ளார்கள். ஆகவே பூர்வீக நாகதம்பிரான் பக்த்தர்கள் அனைவரும் எம்பெருமானின் 2011 ம் ஆண்டு தீர்த்தோற்சவ விழாவைகண்டு களித்து பெருமானின் அருட்கடாட்சத்தினை பெற்றுய்வீர்களாக.
 
More Articles...
MiniCalendar
August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery