அறிவிப்பு
22.01.2017 இன்று ஞாயிற்றுக்கிழமை திருவிழம் (சீட்டு குலுக்கல்) நிகழ்வு இடம்பெற்றது.![]() நாகர்கோவில் வடக்கு மக்களின் பாரம்பரியங்களில் மிகவும் ஆச்சரியமான சீட்டுக்குலுக்கல் நிகழ்வு வழமைபோன்று பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் இன்று 22.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி பூஜையில் இடம்பெற்றுள்ளது. அங்கே இவ்வாண்டிற்கான மூன்று பிரமுகர்களை தெரிவு செய்யப்பட்டன. அவற்றில் ப.அருள்தாஸ், செ.நந்தகுமார், யோ.தவறஞ்சன் ஆகியோர்கள் இறைவன் அருளால் தெரிவுசெய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து எதிர்வரும் 28.01.2017 சனிக்கிழமை மீன்பிடித்தொழில் ஆரம்பிக்க உள்ளார்கள். Photos |
அன்பார்ந்த வாசகர்களுக்கு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.![]() உலகமெங்கும் பரவி வாழும் எமது உறவுகளின் இல்லங்கள் தோறும் முத்தமிடும் நாகர்மணல் இணையத்தினராகிய நாங்கள் இந்நாளில் துன்பங்கள் விலகி இன்பங்கள் என்றென்றும் இல்லங்களில் பூத்துக்குலுங்க தைபொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். அன்பான வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 2017.![]() உலகமெங்கும் பரவி வாழும் அன்பார்ந்த வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.... என்றென்றும் உங்கள் உறவுகளுடன் இன்பமான வாழ்வினை வாழ வேண்டும் அதற்கு இறைவன் துணைபுரியவேண்டும். |
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் திருவொம்பாவை பூஜை![]() நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் திருவொம்பாவை பூஜை எதிர் வரும் 02.01.2017 திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அதிகாலை 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பாரயணம் இசைத்து எம்பெருமானின் திருக்கதவு திறக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து அபிஷேக ஆரதனை நடைபெற்று தொடர்ந்து Last Updated (Saturday, 31 December 2016 02:50)
செல்வன். சத்தியமூர்த்தி கபாஸ்கர் 30.11.2016 அன்று Biomedical Science பட்டம்பெற்றுள்ளார்.நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த செல்வன். சத்தியமூர்த்தி கபாஸ்கர் கடந்த 30.11.2016 புதன்கிழமை அன்று கொழும்பு மகிந்தராஜபக்ஷ்ச திரையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் Biomedical Science ற்கான பட்டத்தினை பெற்றுள்ளார். பட்டம்பெற்ற கபாஸ்கர் என்பவரை எமது கிராமமக்கள் சார்பாக நாகர்மணல் இணையத்தினர் பாராட்டுவதுடன் இவர் மேலும் பலபல பட்டங்களினை பெற்று எமதுகிராமத்திற்கு பெருமை ஈட்டித்தரவேண்டுமென வாழ்த்துகின்றனர்.
|