Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home அறிவிப்புகள் வடக்கு மக்களிடம் இருந்து சூத்திரதாரர்களினால் பறிக்கப்பட்ட பூர்வீக நாகதம்பிரான்! ஆலயம்...நடந்தது என்ன?. அன்பர்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்...
We have 8 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday57
mod_vvisit_counterYesterday90
mod_vvisit_counterThis week147
mod_vvisit_counterThis month1806
mod_vvisit_counterAll761098
Live User

வடக்கு மக்களிடம் இருந்து சூத்திரதாரர்களினால் பறிக்கப்பட்ட பூர்வீக நாகதம்பிரான்! ஆலயம்...நடந்தது என்ன?. அன்பர்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்கள்...

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் கடந்த 45 வருடங்களுக்கு முன்னர் வடக்குமக்களை கடற்றொழிலாளர்கள் என்ற பாகுபாடு பார்க்கப்பட்டு ஒதுக்கிவைத்ததன் பொருட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு TR-105 நம்பிக்கைச்சொத்து மோசடி என்ற தலைப்பில் வழக்காடப்பட்டு நீதிமன்றத்தினால் ஒரு விதிமுறை (யாப்பு) அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆலயத்தில் எல்லா மக்களாலும் திறம்பட 2000ம் ஆண்டுவரை வழிபாடு நடாத்தப்பட்டு வந்தது. அதன்பின்னர் 2000ம் ஆண்டு எமது கிராமத்தை விட்டு ஒட்டுமொத்த மக்களும் நடைபெற்ற யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பொருட்டு எமது கிராமத்திற்கு 16 அடியவர்கள் உதவி அரசாங்க அனுமதியுடனும் இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்புடனும் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தை பார்வையிட சென்று அங்கே சிரமதானப்பணிமூலம் ஆலயம் சுத்தமாக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து பூர்வீகநாகதம்பிரான் ஆலயம் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பூஜை ஆராதனைகள் நடைபெற்று வந்த காலப்பகுதியில் 2011ம் ஆண்டு நம்பிக்கைமோசடிதாரர்களின் சூழ்ச்சி அரங்கேற ஆரம்பித்தது. 2011ம் ஆண்டு பூர்வீகநாகதம்பிரான் ஆலய பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டு ஆலய முன்றலில் திரு ஆ.நவரத்தினசாமி அவர்களின் பாராயணத்துடன் கூட்டம் ஆரம்பமாகியது அக்கூட்டத்தில் அதிகமான அடியவர்கள் வடக்குமக்களாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்கூட்டத்தில் சூழ்ச்சிதாரர்களின் முதற்கட்ட மோசடி. கடந்த காலம் நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட (வழக்கு இலக்கம் TR-105) நடைமுறை யாப்பினை நிராகரித்து புதியதொரு நடைமுறை யாப்பினை தயாரித்து அதனை அனைவரது முந்நிலையிலும் வாசிக்கப்பட்டது. அவற்றின் சாராம்சம். சூத்திரதாரர்கள் ஜாதிவேறுபாகுபாடு காட்டப்பட்டு கடற்றொழிலாளர்கள் என்ற காரணத்தினால் வடக்கு மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இதனை அவதானித்த வடக்குமக்களின் பிரதிநிதியாக கலந்துகொண்ட ஊர் பெரியார்கள் அவர்களால் சூழ்ச்சிதாரர்களின் புதிய நடைமுறையாப்பு நிராகரிக்கப்பட்டது அதனை வடக்கு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். மக்களே!!!! இந்த இடத்தில் அவதானிக்கவேண்டிய ஒரு முக்கிய விடயம் என்னவென்றால். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அடியவர்களில் பெரும்பான்மை வடக்கு மக்களே. கூட்டத்தில் அதிகமாக வாக்களிக்கப்பட்டால் அவர்களுக்குத்தான் முதலிடம் என்பதனை அறிந்துகொண்ட சதிகாரர் அதை மூடிமறைத்து செய்த வேலை என்னவென்று தெரிந்துகொள்ளவேண்டும். அதாவது புதிய நடைமுறை யாப்பினை வடக்கு மக்கள் நிராகரித்து மாண்புமிகு நீதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட கடந்தகால TR-105 யாப்பினை ஏன் மாற்றவேண்டும்? அப்படி மாற்றி அமைக்க அவசியம் என்ன? அப்படி மாற்றி அமக்கவேண்டுமாயின் மகாசபை கூட்டத்தில் கூடி கதைத்து அதனை எல்லாஅடியவர்களுக்கும் சாதகமான முறையிலும் இலங்கை இந்துகலாச்சார விழுமியங்களிற்கும் அமைவாக மாற்றம் செய்யவேண்டும். என்று வடக்குமக்கள் சார்பாக ஊர் பெரியார் அவர்கள் கேட்டுக்கொண்டபோது. நம்பிக்கை மோசடிதாரர்களின் தலைவர் முருகர் சிதம்பரப்பிள்ளை அவர்களும், அப்பாத்துரை நடராசா இருவரும் உட்பட அனைவரும் கூறியதொரு கேவலமான வார்த்தை. இவ்வாலயம் நாங்கள் நினைத்தபடிதான் நடார்த்தப்படும் வடக்கு மக்களாகிய நீங்கள் விரும்பினால் வரலாம் இல்லை என்றால் ஆலயத்தை விட்டு வெளியேறலாம் என்று இறைவன் சந்நிதியில் வைத்து ஆணவமாக கூறினர். (அதற்கான ஆதாரம் எம்மிடம் உள்ளது) அந்தவேளையில்தான் வடக்கு மக்களின் உரிமை கடற்றொழிலாளி என்ற ஜாதி ஆயுதத்தினை பயன்படுத்தி பறிக்கப்பட்டது. அன்று அவர்கள் முந்நிலையில் வடக்கு மக்களால் விடப்பட்ட கோரிக்கை என்னவென்றால் நீங்கள் செய்யும் இந்த சதியினை நிறுத்தி கடந்தகாலம்போன்று ஆலயம் நடாத்தப்படவேண்டும் தவறும் பட்சத்தில் நாங்கள் மீண்டும் நீதிமன்றம் சென்று வழக்கு தாக்கல் செய்வோம். என்றபோது பரம்பரைத்தலைவர் அவர்கள் கூறினார். நீங்கள் எங்குசென்றாலும் என்களது முடிவு மாறாது. எனவே வடக்கு மக்களாகிய நாங்கள் அடுத்தகட்ட நகர்வின் முதற்கட்டமாக சென்றோம் யாழ்மாவட்ட அரச அதிபரிடம் அங்கே சூழ்ச்சிதாரர்களினால் நடந்தது என்னவென்று தெரியுமா????

வடக்குமக்களும், தெற்கு மக்களும் இணைந்து சுமார் 6 அடியவர்கள் கொண்ட குழு அரச அதிபரிடம் எமக்கு நடந்த அநியாத்தினை பூரண ஆதாரங்களோடு ஒரு கோவையில் (File) அடக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அரச அதிபர் கூறியுள்ளார் எமக்கு சிலநாட்கள் தேவைப்படுகின்றது நான் தீர ஆராய்ந்து பதிலளிப்பேன் என்று. அதனை ஏற்றுக்கொண்டு இவர்கள் நம்பிக்கையோடு திரும்பிவந்துள்ளார்கள். ஆனால் காலம் ஆறு மாதங்கள் ஆகியும் அரச அதிபரிடம் இருந்து எந்த ஒரு தகவலும் வராதகாரணத்தினால் இக்குழு அரச அதிபர் காரியாலயத்திற்கு சென்று நாங்கள் சமர்பித்த பிரச்சினைக்கு உங்களாலான தீர்வு எமக்கு இதுவரையிலும் கிடைக்கவில்லையே என்று கேட்டபோது. அங்கே அரச அதிபர் பணிப்பாளரை அழைத்து இவர்களால் கையளிக்கப்பட்ட மனுவினை எடுத்துவரும்படி கேட்டதன் பொருட்டு பணியாளர் சென்று தேடியபோது அங்கே நாம்மால் கையளிக்கப்பட்ட ஆவணம் காணாமல் போயுள்ளது. காரணம் அரச அதிபர் மணிமனையில் வைத்தே சூழ்ச்சிதாரர்களினால் தூக்கி வீசப்பட்டது. எல்லா இடங்களும் தேடப்பட்டும் எம்மால் கையளித்த ஆவணம் இல்லாததையிட்டு அரச அதிபரே ஆச்சரியப்பட்டு இல்லை இல்லை இவர்கள் தந்த மனு இங்கே வைத்தது உண்மை என்று கூறியபோது. இதன் காரணத்தினை நன்கு அறிந்துகொண்ட நாம் உடனடியாக எமது கையில் இருந்த ஆவணத்தின் பிரதியினை மீழ்பிரதி எடுத்து மீண்டும் அரச அதிபரிடம் கையளித்தோம். இப்படியே இந்த நடவட்டிக்கை ஸ்தம்பிதமாக நகர்ந்துகொள்வதையும் அரச அதிபர் பணிமனையிலும் சூழ்ச்சிதாரர்கள் உள்நுழைந்து மோசடிசெய்வதனையும் அவதானித்த வடக்கு மக்கள். மாற்று நடவடிக்கை ஒன்றினை சட்டரீதியாக நடைமுறை படுத்த ஏற்பாடு செய்துகொண்டதன் பிரகாரம். நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. எம்மால் தொடுக்கப்பட்ட வழக்கின் சாராம்சம் என்னவென்றால் கடந்தகாலம் நீதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட TR-105 தீர்ப்பினை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்ற நோக்கத்தோடு TR-105 வழக்கின் தீர்ப்பு பிரதியாக கடந்தகால யாப்பு இணைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விடயங்களும் உண்மைகளும்....

TR-105 வழக்கின் தீர்ப்பினை அமுல்படுத்த வேண்டும் என்று புதிதாக தொடுக்கப்பட்ட வழக்கு இலக்கம் TR-161 நம்பிக்கைசொத்து மோசடி என்ற தலைப்பில் வழக்கு நடைபெற்று வந்த காலப்பகுதியில். யாழ் அரச அதிபரினால் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணத்தால். உ.அ.அதிபரிடம் அரச அதிபர் கூறியுள்ளார் இருவரையும் ஒரு இணக்கப்பாட்டிற்கு கொண்டுசென்று பிரச்சினையினை தீர்க்குமாறு. அதற்கமைவாகதிருலிங்கநாதன் அவர்களால் (வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர்) குடத்தனை கிளையில் இரு குழுக்களும் அழைக்கப்பட்டு ஒரு இணைக்கப்பாட்டிற்கான கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது ஆனால் அங்கு சூழ்ச்சிதாரர்கள் பக்கமே பக்கசார்பாகவே உ.அரச அதிபர் உரையாடியது தெள்ளத்தெளிவாக எமக்கு தெரிய வந்தது ஆதலால் அவ் உரையாடல் எமக்கு எவ்வித பயனுமளிக்கவில்லை.

உ.அ.அதிபர் முந்நிலையில் வைத்து நம்பிக்கை மோசடிதாரர்கள் கூறுகின்றனர். TR-105 வழக்கின்படி இதுவரைகாலமும் ஆலயம் நடைபெற்று வந்தது உண்மைதான் ஆனால் காலம்கடந்த விதிமுறை யாப்பு மாற்றம் செய்யப்படவேண்டிய தேவைகள் இருக்கின்றது அதற்கு சட்டத்திலும் இடமுண்டு என்கின்ற தலைப்பில் புதிய ஒரு சூழ்ச்சி திட்டத்தினை அங்கே அரங்கேற்றினர். அதற்கு வடக்கு மக்கள் கூறிய விடயம் என்னவென்றால். காலம்கடந்த யாப்பு மாற்றம்செய்யப்படவேண்டியது அவசியம்தான் ஆனால் அதனை எல்லோருடனும் கலந்து ஆலோசனை பண்ணிய பின்னர்தான் மாற்றம் செய்யும் அதிகாரம் சட்டத்தில் உண்டு. அப்படி இருக்க இந்த நம்பிக்கை மோசடிதாரர்கள் தாங்கள் மட்டும் ஒன்றிணைந்து தமக்கு சாதகாமக விதிமுறை யாப்பினை மாற்றம் செய்தது மாபெரும் தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டது. அதன்பின்னர் நம்பிக்கை மோசடிதாரர்களும் உதவி அரசாங்க அதிபரும் மெளனம் சாதித்ததன் பொருட்டு. உ.அ.அதிபர் திருலிங்கநாதன் கூறியுள்ளார். சரி இரு அணியினரும் ஒன்றாக இணைந்து விதிமுறை யாப்பில் திருத்தம் செய்ய முன்வரவேண்டும். என்று கேட்டதற்கிணங்க. நம்பிக்கை மோசடிதாரர்களில் 8 உறுப்பினர்களும், வடக்குமக்கள் சார்பாக 8 உறுப்பினர்ட்களும் வாருங்கள் எமது முந்நிலையில் வைத்து யாப்பினை திருத்தம் செய்வோம் என்று கூறியதற்கு இரு அணியினரும் ஒப்புக்கொண்டு ஓரிரு நாட்களில் அந்த 8 உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் நாம் தருகின்றோம் என்று வடக்கு மக்களால் கோரப்பட்டு ஒன்று கூடல் ஒரு இணக்கப்பாட்டுடன் முடிவுற்றது ஆனால்....... இணக்கப்பாடு நடைபெறவில்லை அதற்கு மோசடிதாரர்கள் தங்களின் சூழ்சிநாடகம் வெளிப்பட்டுவிடும் என்று பின்வாங்கினர் அது எதற்காக என்றால்?...வடக்கு மக்கள் சார்பாக 8 உறுப்பினர்களை நாம் தெரிவுசெய்து பெயர் பட்டியலை சமர்ப்பித்தபோது அப்பட்டியலில் உள்ள உறுப்பினர்கள் எல்லோரும் கடந்தகாலம் பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்தில் பாகுபாடுகளின்று அடியார்கள்களோடு ஒன்றிணைந்து தொண்டு செய்தவர்களும், மற்றும் கடந்தகால யாப்பின் அத்தியாயங்களும் நன்கு அறிந்தவர்கள் என்ற காரணத்தினால் இவர்களுடன் நாம் உரையாடி வெல்ல முடியாது என்று நினைத்து பிறமுதுகு காட்டி ஒளிந்துகொண்டனர்.

அதன்பின்னர் நீதிமன்ற வழக்கு வழமைபோன்று நடைபெற்று வந்தது. இச்சந்தர்ப்பத்தில் புலம்பெயர்ந்தநாட்டில் லண்டன் மாநகரில் பூவீக நாகதம்பிரான் அடியவர்களால் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி உறுப்பினர்களுக்கும் இத்தகவல்கள் வெளிப்படுத்தப்படடதன் பொருட்டு ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி லண்டன் கிளை பொறுப்பதிகாரியான மோகன் தோழர் அவர்கள் இப்பிரச்சினைக்கு முகம்கொடுத்து நேரடியாக பூர்வீகநாகதம்பிரான் ஆலயத்திற்கு வருகைதந்து இருதரப்பினர்களையும் ஒன்று திரட்டி ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டபோது. ஆலய பரம்பரைத்தலைவர் அவர்களால் வழமைபோன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. அதன்பின்னர் வடக்கு மக்களால் கோரப்பட்ட கருத்து. கடந்தகால யாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்ததவறினால் வழக்கு தொடரும் நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்பாத்துள்ளோம் என்று கூறியபோது. 
"வடக்கு மக்களில் ஒன்றுமே விழங்காத சில மண்டுகள்" (இந்த ஜடங்களின் பெயர்கள் தேவைப்படின் ஆதாரங்களுடன் வெளியிடுவோம்) 
அவர்கள் வடக்குமக்களின் கோரிக்கைக்கு மாறாக சூழ்ச்சிதாரர்களுடன் இணையப்போவதாக கூறினர். அதனை கட்சிதமாக்க பூர்வீகநாகதம்பிரான் பரம்பரை நம்பிக்கை பொறுப்பாளர் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்முகமாக சரி நீங்கள் எம்முடன் வாருங்கள் ஆலயத்தை நடார்த்துவோம் என்று தந்திரோபயமான விட்டுக்கொடுப்புடன் அவர்களை ஏற்றபோது வடக்குமக்கள் பெரும்பாலானவர்கள் அதனை மறுத்து சிறு வாக்குவாதம் நடைபெற்றது. அந்தவேளையில் கலந்துரையாடலை சுமூக நிலைக்கு கொண்டுசெல்லும் நோக்குடன் லண்டன் மாநகரில் இருந்து வருகை தந்த ஈழமக்கள் ஜநநாயக கட்சி பொறுப்பாளர் திரு மோகன் தோழர் அவர்கள் கூறியது வழமைபோன்று இரு அணியினரும் இணைந்து முக்கிய பிரமுகர்கள் வாருங்கள் கல்ந்து கதைப்போம் என்று கேட்டதற்கு இணைங்கி மறு நாள் மோகன் தோழரிடமும் முக்கிய பிரமுகர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பித்தவுடன் சூழ்சிதாரர்கள் பின்வாங்கிக்கொண்டு நகர்ந்து சென்றனர். இதனால் மோகன் தோழர் அவர்களின் செயல்பாடும் பயனற்றாதகியது.

இப்படியே எந்தவொரு சீரான நிலமையும் அடையாத வேளையில் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு நடைபெற்று இறுதிக்கட்டத்திற்கு வந்தது. நம்பிக்கைச்சொத்து மோசடி என்ற தலைப்பில் தொடுக்கப்பட்ட TR-161 வழக்கின் இறுதித்தீர்ப்பானது. தீர விசாரணைகள் செய்வதன் பொருட்டும், கடந்தகாலம் TR-105 வழக்கில் மாண்புமிகு நீதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட ஒரு சமநிலையான தீர்ப்பு உறுதியானதும், உண்மையானதும் என்ற கருத்துடன். நம்பிக்கைசொத்து மோசடிதாரர்களுக்கு கூறப்பட்டது, TR-161 வழக்கின் தீர்ப்பும் யாதெனில்?

கடந்தகாலத்தைப்போன்று (TR-105) ஆலயம் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகள் வழங்கவேண்டும் அதற்கு உடனடியாக 15 நாட்களுக்குமுன்னர் மகாசபைக்கூட்ட அழைப்பு விடுக்கப்பட்டு TR-105 யாப்பின்படி ஆலய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டு ஆலயத்தை நடார்த்தவேண்டும் என்றும். அப்படி நடார்த்த தவறும் பட்சத்தில் மனுதாரர்கள் ஆகிய வடக்குமக்கள் நீங்களே ஒரு பொதுக்கூட்டத்தினை ஏற்பாடு செய்து கடந்தகால யாப்பின் பிரகாரம் ஒரு நிர்வாகத்தினை தெரிவுசெய்து ஆலயத்தினை நடார்த்த உரிமயுண்டு என்று கூறியதோடு. மாண்புமிகு நீதிபதி அவர்கள் மனுதார்களாகிய எங்களிடம் கேட்டார் "நம்பிக்கைச்சொத்து மோசடிதாரர்கள் வழமைக்கு மாறாக ஆலயத்தை நடார்த்தும் வேளையில் நீங்கள் அவர்களுக்கு எதிராக கடந்தகால யாப்பின்படி ஒரு நிர்வாகத்தை தெரிவுசெய்து நடார்த்தி இவ் நீதிமன்றத்தில் வந்திருந்தால் கட்டாயம் எதிர்மனுதாரர்களை நிராகரித்து உங்களிடமே ஆலயபொறுப்பினை ஒப்படைக்க சந்தர்ப்பம் வந்திருக்கும் அதனை ஏன் நீங்கள் செய்ய தவறினீர்கள்??? என்று" இப்படி TR-105 க்கு சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கு TR-161 வழக்குக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால்....

வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டும் பூர்வீக நாகதம்பிரான் ஆலய நம்பிக்கைசொத்து மோசடிதாரர்களால் எந்தவொரு செயற்பாடும் முன்னெடுக்கப்படவில்லை. வெளிப்பூச்சுக்காக வடக்கு மக்களை வரும்படி வேண்டா வெறுப்பாக சம்பந்தமில்லாதவர்களிடம் தகவல்களை மூன்று தடவைகள் அனுப்பியுள்ளார் இராஜரஞ்சன். பின்னர் சிறிதுகாலம் தந்திரோபாயமாக நகர்த்திசென்று மீண்டும் ஒரு சூழ்ச்சி நாடகத்தினை தயார் செய்துள்ளனர். என்ன்வென்றால் மீண்டும் தமக்கு சாதகமாக ஒரு விதிமுறை யாப்பினை தயாரித்து அதனை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர் ஆனால் சூழ்ச்சிதாரர்களை தவிர எவருக்குமே தெரியாமல். அதற்கு மாண்புமிகு நீதிபதி அவர்கள் எதிப்புக்கள் கிடைக்கவில்லை என்றகாரணத்தினால் அதனை ஏற்றுக்கொண்டு அதற்கான அதிகாரத்தினை வழங்கியுள்ளார் அவைதான் TR-71 என்ற முகாமைத்திட்டமாம். அதனை கையில் வைத்துக்கொண்டு உதவி அரசாங்க தலமையில் பொதுக்கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு திட்டம் வகுத்து அத்தகவல் விளம்பர பலகையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர்தான் வடக்கு மக்களுக்கு நாசதாரர்களின் அடுத்த நாடகம் தெரியவந்துள்ளது. உடனடியாக உ.அரசாங்க அதிபரிடம் சென்று முறையிட்டனர். இந்த முகாமைத்திட்டம் ஆனது பெரும்பான்மையான மக்களை ஆலயத்தைவிட்டு அகற்றப்போட்ட திட்டம் இதனை உடனடியாக ரத்துசெய்து இதற்கு ஒரு தீர்வு தங்களினால் எமக்கு வழங்கப்படவேண்டும் என்று கேட்டதற்கிணங்க. நாசதாரர்களின் முகாமைத்திட்ட நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டது. அத்துடன் உதவி அரசாங்க அதிபர் இப்பிரச்சினையினை முற்று முழுதாக அறிந்துகொள்ளும் நோக்கத்துடன் ஆலய முன்றலில் ஒரு விசேட பொதுக்கூட்டம் ஒன்று நடார்த்த ஏற்பாடு செய்துள்ளார்.

மேற்படி வடமராட்சி கிழக்குஉதவி அரசாங்க அதிபர் தலைமயில் கூட்டம் ஆரம்பமானது. கூட்டம் ஆரம்பமாகமுன்னரே உ.அ.அதிபர் அவர்கள் மக்களின் அனுமதியுடன் கலந்துரையாடலை தமது கையடக்கதொலைபேசியில் பதிவேற்ரம் செய்துள்ளார். கூட்டத்தில் நம்பிக்கைச்சொத்து மோசடியின் தலைவர் இராஜரஞ்சன் அவர்கள் தேவைக்கு அதிகமான பொய்களைக்கூறினார். அத்தோடு முடியவில்லை பின்னர் சூழ்ச்சித்திட்டங்களை வகுத்துக்கொடுக்கும் முக்கிய நபரான பத்மநாதன் அவர்களும் அவர்களுடன் இணைந்து குருபரனும் கூறிய பொய்கள் மக்களை ஆவேசப்படுத்தியது. பின்னர் இவர்களினால் கூறப்பட்ட கருத்துக்களை நிராகரித்து உண்மையான கருத்துக்களை வடக்குமக்களின் பெரியார் ஒருவர் மக்கள் முந்நிலையில் உதவி அரசாங்க அதிபர் அவர்கட்கு விளக்கமாக கூறினார். உ.அ.அதிபரும் மக்களும் திகைத்து நின்றனர். பின்னர் நடைபெற்ற வழக்கில் தாம் வென்றோம் எனவும் தமக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு அமைந்துள்ளது என்றும். குருபரன் அவர்களால் கூறப்பட்டது. அதன்பின்னர் வழக்கின் மனுதாரர் ஒருவரால். நடைபெற்று முடிந்த TR-161 வழக்கின் தீர்ப்பானது தற்போது செயல்திட்டம் முற்றிலும் தவறு என்றும் 15 நாட்களுக்குள் மகாசபைக்கூட்டத்திற்கு அறிவித்தல் விடுத்து மகாசபைக்கூட்டம் TR-105 க்கு அமைவாக ஆலய நிர்வாகம் தெரிவுசெய்யப்படவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கி எதிர்த்தரப்பினருக்கு கட்டளை விதிக்கப்பட்டடது. ஆனால் இங்கே தேவயற்ற வார்த்தகளை கூறிக்கொண்டிருக்கும் எதிர்த்தரப்பினர் TR-105 வழக்கு யாப்பு யுத்தத்தினால் அளிந்து போய்விட்டது என்று ஒரு பொய்யான வார்த்தை கூறினார்களே இதுதான் இவர்கள் ஆலயம் நடார்த்தும் முறையா????? வடக்கு மக்களாகிய எங்களிடம் எல்லா ஆவணமும் இருக்கின்றது. உண்மையிலயே அளிந்துபோனதென்றால் எல்லோருமாக ஒன்றிணைந்து ஒரு யாப்பினை உருவாக்கியிருக்கலாமே என்றும் இப்பொழுதுகூட புதிய விதிமுறை யாப்பினை அமைக்கலாம் ஆனால் இருதரப்பினரும் இணைந்துதான் உருவாக்கவேண்டும் அதற்கு நாங்கள் தயார் (ஆலயநிர்வாக)
நம்பிக்கைச்சொத்து மோசடிதாரர்களை வரச்சொல்லுங்கள் என்று கேட்டதற்கிணங்க உதவி அரசாங்க அதிபர் அவர்களால் மீண்டும் இந்த முயற்சி ஏற்பாடு செய்யப்பட்டது ஆனால் அவர்கள் அதற்கும் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

அன்பானவர்களே முக்கியமாக அறிந்துகொள்ளவேண்டிய விடையம்..... கடந்தகாலங்களில் அதாவது யுத்தத்திற்கு முன்னர். வருடாந்த உற்சவமானது 10 நாட்களும் 10 உபயதாரர்கள். ஆனால் இப்போது சூழ்ச்சிதாரர்கள் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கொடுக்கும் நோக்குடன் 6 உபயங்களை பறித்தெடுத்துள்ளனர். சூழ்ச்சிதார்களுக்கு பயந்து கடந்தகால இந்த 6 உபயகாரர்களும் ஒதுங்கிக்கொண்டனர். இருந்தும் 6ம் உபயம் பாம்புத்திருவிழா உபயதாரர் தமக்கு இந்த உபயம் வேண்டுமென்று நீதிமன்றம் செல்ல எத்தனித்தபோது ஆவணமான பற்றுச்சிட்டை அவரிடம் இல்லை ஏனெனில் யுத்தம் முடிவுக்கு வந்தும் இரண்டு வருடம் இந்த உபயதாரரால் 6ம் திருவிழாவிற்கான நிதி வழங்கப்பட்டது ஆனால் அவர்களால் பற்றுச்சிட்டை வழங்கப்படவில்லை காரணம்??? அவர்கள் அப்பொழுதே திட்டம் வகுத்துள்ளார்கள். கடந்த இரண்டு வருடங்களாக குறித்த 6ம் உபயம் பாம்புத்திருவிழா மோசடிதாரர்களின் உறவினருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளதை அறிந்து சென்ற வ்ருடம் திருவிழாக்கூட்டத்தில் உ.அ.அதிபர் அவர்கள் முந்நிலையில் இந்தகுற்றச்சாட்டினை முன்வைத்தபோது உ.அ.அதிபர் அவர்களால் பரிந்துரை விதிக்கப்பட்டது மோசடிதாரர்களுக்கு. 6ம் திருவிழா சபை பொறுப்பேற்கவேண்டும் என்று. அதற்கு மோசடிதார்கள் ஒப்புக்கொண்டதுபோல கூறிவிட்டு 6ம் திருவிழா அன்று மாண்புமிகு உ.அ.அதிபரின் கட்டளையினை மீறி செயல்பட்டதனை உடனடியாக நிறுத்தி அங்கே அந்த இடத்திற்கு உதவி அரசாங்க அதிபர் அவர்கள் விரைந்துவந்து மோசடிதார்களை எச்சரிக்கை செய்துவிட்டு திருவிழா முடிந்தபின்னர் ஒரு கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்வதாக் அகூறி வடக்கு மக்களுக்கும் நன்றியினை கூறி ஆலயம்விட்டு சென்றுள்ளார்.

திருவிழா முடிவடைந்து உ.அ.அதிபரினால் ஏற்பாடுசெய்யப்பட்ட கலந்துரையாடலில் 300க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டிருந்தனர் இவற்றில் முக்கிய அம்சமாக புலம்பெயர்ந்த நாட்டின் பலபாகங்களில் இருந்தும் அடியவர்கள் கலந்துகொண்டிருந்த வேளையிலும் ஆலய நம்பிக்கைப்பொறுப்பாளரின் தரப்பில் ஒருசிலர் மாத்திரமே இக்கூட்டத்திற்கு சமூகமளித்தனர். இருந்தும் ஆலய நம்பிக்கைபொறுப்பு சார்பாக கலந்துகொண்ட ஒருசிலர் அவர்களுக்குள்ளேயே கருத்துமுரண்பாடு இடம்பெற்று விவாதம் செய்தவேளையில் உ.அ.அதிபர் அவர்கள் இக்கூட்டத்தை நிறுத்தி இதற்கான தீவினை பின்னர் கலந்து ஆலோசனை பண்ணி முடிவுசெய்யலாம் என்ற எண்ணப்பாட்டுடன் கலந்துரையடல் நிறவுற்றது.

அதன் பின்னர் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் அவர்கள் பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதியினரை சந்தித்து. நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் தொடர்பான வழக்கு உங்கள் கவனத்தில் விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்று நான் அறிந்துகொண்டுள்ளேன். அந்த வழக்கில் நாகர்கோவில் பெரும்பாண்மையான ஒரு பகுதி மக்களை ஒதுக்கிவைக்கும் நோக்கத்தினாலேயே தற்போது அந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது ஆதலால் அவ்வழக்கினை சற்று பொறுமையாக ஆராய்ந்து தீர்ப்பினை வழங்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர். இந்த சந்தர்ப்பத்தில் அவ் நீதிபதி மாற்றம் செய்யப்பட்டு புதிய நீதிபதி அமர்த்தப்பட்டது பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு.

குறிப்பு:- TR-161 வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியிலேயே.... ஆலய நம்பிக்கைச்சொத்து மோசடிதாரர்கள். முகாமைத்திட்டம் என்கின்ற பெயரில் TR-71 ஒரு வழக்கு யாருக்குமே தெரியாமலும், நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற TR-161 வழக்கு சட்டத்தரணி மற்றும் மனுதாரர்களுக்குமே தெரியாமல் TR-71 வழக்கு முன்னெடுத்து வந்தவேளையில் TR-161 வழக்கின் தீர்ப்பிற்கு பின்னர்தான் அவர்களின் முகாமைத்திட்ட வழக்கின் முடிவு கிடைத்தது. இதற்காகவே இவர்கள் TR-161 வழக்கில் மாண்புமிகு நீதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை செயல்படுத்த தாமதப்படுத்தினர். இதனால் இவர்கள் நீதிமன்றத்தினையே அவமானப்படுத்திய செயலாகும்.

அன்பார்ந்த மக்களே!!!! இப்படிப்பட்ட நிலையிலும், நீதிமன்ற வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலும் எதற்காக வடக்கு மக்கள் 10ம் திருவிழாவினை நடார்த்திவருகின்றார்கள் என்று ஒரு கேள்வி எல்லோரது எணணங்களிலும் தோன்றலாம்...ஆனால் எங்கே இவர்கள் வடக்கு மக்களின் 10ம் திருவிழாவினையும் பறித்துவிடுவார்களோ என்ற ஐயத்தில்தான் நாகதம்பிரானில் வைத்த பக்த்தியில் வடக்குமக்களாகி எம்மால் 10ம் திருவிழா நடார்த்தி வரப்பட்டது.
ஒன்று மட்டும் விழங்கியது நம்பிக்கைச்சொத்து 
மோசடிதாரர்கள் நியாயத்தையும் நாகதம்பிரானையும் மதிக்கவில்லை என்று.

"நன்றி"
நகர்கோவில் வடக்கு நாகதம்பிரான் அடியேன்.

 
MiniCalendar
March 2024
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery