Website TemplatesJoomla TemplatesWeb Hosting
.:: F L A S H N E W S ::.

நாகர்கோவில் தெற்கு மக்களின் விவசாயத்தொழில்

யாழ்ப்பாணம் நாகர்கோவில் என்னும் இக் கிராமமானது. நாகர்கோவில் தெற்கு, நாகர்கோவில் வடக்கு என்று இரு பிரிவுகளைக்கொண்டதுடன் நாகர்கோவில் தெற்கே வாழும் மக்களின் பாரம்பர்ய தொளிலாக கமத்தொளிலையும், நாகர்கோவில் வடக்கே வாழும் மக்களின் பாரம்பரிய தொளிலாக மீன் பிடித்தொளிலயும் புரிந்து வாழ்ந்துவந்துள்ளார்கள். நாகர் கோவில் தெற்கே வாழ்பவர்களின் வாழ்க்கைவரலாறு......!

நாகர்கோவில் தெற்கு என்று பிரிக்கப்பட்ட பகுதிவாழ் மக்கள். பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தை மையமாகக்கொண்டு இவ் ஆலயத்துக்கு மேற்க்குப்பக்கமாக சுமார் 500 குடும்பங்களுக்கு மேலும், இவ் ஆலயத்துக்கு கிழக்குப்பக்கமாக சுமார் 500 குடும்பங்களுக்கு மேலு விவசாயத்தொளிலையே செய்து மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள்.

          இவர்கள் கமத்தொளில் செய்யும் விவசாய எல்லையாக.கிழக்குப்பக்கமாக சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் உள்ள காவற்தெய்வமான புன்னைமரத்தடியில் குடியிருக்கும் வைரவர் (புன்னையடிவைரவர்)  ஆலய வளாக எல்லைவரையும், (1 கிலோமீற்றர் தொலைவில் வயல்வெளியில் சுடலைப்பிட்டி பிள்ளையார் ஆலயமும் மணல் வெளியில் தட்டாவடி முருகன் ஆலயமும் அதற்கு முன்பாக தமிழர் புனர்வாழ்வு கழகத்தினரால் அமைக்கப்பட்ட தும்புத்தொழிற்சலையும் அமைந்துள்ளது) மேற்குப்பக்கமாக சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அரசவைத்தியசாலைக்கு (அம்பன் வைத்தியசாலை) அண்மையில் உள்ள நாச்சிமார் ஆலய வளாக எல்லைவரையும், (500 மீற்றர் தொலைவில் பெரியநாகதம்பிரான் என்று அளைக்கப்படும் நாகதம்பிரான் ஆலயம், வீரபத்திரர் ஆலய அமைந்துள்ளது) உள்ள சுமார் 4 கிலோமீற்றர் நீள் சதுரப்பரப்பளவைக் கொண்டுள்ளது விவசாய நிலத்திலேயே இவர்கள் விவசாயம் செய்து வந்துள்ளார்கள்.

               இவ்விவசாயநிலத்தில் பிரதான விவசாயமான நெற்பயிர்செய்கையுடன் பலவகையான காய்கறி வகைகளும் செய்து எமதுகிராமத்துக்கு மட்டுமன்றி வேறு கிராமங்களுக்கும் விநியோகம் செய்து வந்துள்ளார்கள். நாகர்கோவில் தெற்கில் வாழ் மக்கள் தங்களது கமத்தொளிலையே தெய்வமாக்கி சீரும் சிறப்புடனும் வழ்வதற்கு அருள் புரியும் எமதுகிராமத்தின் புகழ்பெற்ற பூர்வீக நாகதம்பிரான். இந்த அற்புதங்கொண்ட தெய்வமே எங்கள் கிராமத்தின் காவற்த்தெய்வமாகும்.

           ஆனால் 1987ம் ஆண்டு இந்தியஇராணுவம் எமதுகிராமத்தில் முகாம் அமத்து எமது மக்கள்மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியதன் பட்சத்தில் எமதுகிராம மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக எமது நாட்டைவிட்டு வெளியேறி பின்னர் இலங்கை இராணுவத்தின் ஆக்கிரமிப்பின் காரணமாக 1995 கார்த்திகை மாதம் எமதுகிராம மக்கள் முற்றாக இடம்பெயர்ந்து வன்னிமாவட்டத்திலும் வெளிநாடுகளிலும் உறவுகளைபிரிந்தும், அந்த பசுமையான வாழ்வைத்தொலைத்தும் பலபல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.

நன்றி

 
MiniCalendar
September 2010
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
Time Clock
Poll
புதிய இணையம் பற்றி?
 
Gallery
No images